குழந்தைப் பாடல்: தவறின்றித் தமிழ் கற்க...

பாலில் புதிய மோரை விடுதல் பிரை-ஏறிப் பார்த்தால் வியக்கவைக்கும் ஏரி கரை! மேலும் மேலும் கரையை மோதும் திரை-தீனி மிகத் தின்றால் உணவில்லை! அதுதான் இரை! பாலென்னும் பாட்டின் பொருள் விளக்கம் உரை-துள்ளிப் பாய்
குழந்தைப் பாடல்: தவறின்றித் தமிழ் கற்க...

பாலில் புதிய மோரை விடுதல் பிரை-ஏறிப்

பார்த்தால் வியக்கவைக்கும் ஏரி கரை!

மேலும் மேலும் கரையை மோதும் திரை-தீனி

மிகத் தின்றால் உணவில்லை! அதுதான் இரை!

பாலென்னும் பாட்டின் பொருள் விளக்கம் உரை-துள்ளிப்

பாய்ந்தோடும் மானின் ஒருவகையே மரை!

ஆவென்னும் பசுக்களின் கூட்டமே நிரை-ஓர்

ஐந்துமரக்கால் நெல்லின் அளவே பரை!

நீர்க்குமிழித் தொகுதியே வெள்ளை நுரை-பூமி

நிலத்துக்கு மற்றும் ஒரு பெயரோ தரை!

கீர்த்தியுடன் வாழுகின்ற தலைவன் துரை-உடலில்

கெட்ட குருதி ஓடும் நரம்போ சிரை!

கூரைமேல் படருகின்ற கொடியோ சுரை-இரு

கூறுபோட்டுப் பிரித்த ஒரு பாதியே அரை!

ஊரைப் பகைத்திருக்கும் குற்றமே புரை-என்றும்

ஓங்குதமிழ் வாழும் வையம் உள்ள நாள் வரை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com