மண்புழுவே ஒளிந்துகொள்!

மண்ணுக் குள்ளே மண்புழுவே என்ன செய்கிறாய்? - நான் மண்ணைக் கிளறி மரம் வளர உதவி செய்கிறேன்! ஏரி மீனைப் பிடிக்க அப்பா இப்போ செல்கிறார்! - தூண்டில் மீனுக் குன்னை இரையாகப் போடப் போகிறார்! கோழிக் குஞ்சு உன்ன
மண்புழுவே ஒளிந்துகொள்!

மண்ணுக் குள்ளே மண்புழுவே

என்ன செய்கிறாய்? - நான்

மண்ணைக் கிளறி மரம் வளர

உதவி செய்கிறேன்!

ஏரி மீனைப் பிடிக்க அப்பா

இப்போ செல்கிறார்! - தூண்டில்

மீனுக் குன்னை இரையாகப்

போடப் போகிறார்!

கோழிக் குஞ்சு உன்னைக் கொத்தக்

காத்து இருக்குது! - அட

ஆபத்துன்னைத் தேடி நேரம்

பார்த்து இருக்குது!

சும்மா சும்மா நீயும் இப்போ

வெளியில் வராதே! - என்

அம்மா, அப்பா கண்ணில் பட்டு

அவதிப் படாதே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com