அஞ்சல் காரர் வருகிறார் - நமக்கு
அஞ்சல் கொண்டு வருகிறார்!
விவர மான தகவலை - என்றும்
விரைந்து வந்து தருகிறார்!
வீடு தோட்டம் தேடியே - ஊரில்
வீதி தோறும் வருகிறார்!
தூர தேசம் எங்கிலும் - மக்கள்
தொடர்பு கொள்ளச் செய்கிறார்!
வெய்யில் மழையைப் பார்த்திடார் -சைக்கிளில்
வேக மாக வருகிறார்!
பையின் உள்ளே அஞ்சல்கள் - பணவிடைப்
பணமும் சேர்த்துத் தருகிறார்!
கடமை செய்தால் உயரலாம் - என்ற
கருத்தைச் சுமந்து வருகிறார்!
கடமை யாற்றி வருகிறார் - நாளும்
கடிதம் சுமந்து வருகிறார்!