அஞ்சல்காரர் வருகிறார்!

அஞ்சல்காரர் வருகிறார்!

அஞ்சல் காரர் வருகிறார் - நமக்குஅஞ்சல் கொண்டு வருகிறார்!

 அஞ்சல் காரர் வருகிறார் - நமக்கு
 அஞ்சல் கொண்டு வருகிறார்!
 விவர மான தகவலை - என்றும்
 விரைந்து வந்து தருகிறார்!
 
 வீடு, தோட்டம் தேடியே - ஊரில்
 வீதி தோறும் வருகிறார்!
 தூர தேசம் எங்கிலும் - மக்கள்
 தொடர்பு கொள்ளச் செய்கிறார்!
 
 வெய்யில் மழையைப் பார்த்திடார் - சைக்கிளில்
 வேக மாக வருகிறார்!
 "பை'யின் உள்ளே அஞ்சல்கள் - பணவிடைப்
 பணமும் சேர்த்துத் தருகிறார்!
 
 கடமை செய்தால் உயரலாம் - என்ற
 கருத்தைச் சுமந்து வருகிறார்!
 கடமை யாற்றி வருகிறார் - நாளும்
 கடிதம் சுமந்து வருகிறார்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com