தேர்வு பயம் வேண்டாம்!

ஆண்டுதோறும் மார்ச் மாதம்தான் பள்ளி இறுதித் தேர்வு வரும். இருந்தாலும் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு முதலே தேர்வு ஜுரம் வந்துவிடும்.
தேர்வு பயம் வேண்டாம்!

ஆண்டுதோறும் மார்ச் மாதம்தான் பள்ளி இறுதித் தேர்வு வரும். இருந்தாலும் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு முதலே தேர்வு ஜுரம் வந்துவிடும்.
 என்னதான் வகுப்புகளில் ஆசிரியர்கள் தேர்வு பற்றிய பயத்தைப் போக்க எண்ணற்ற பகுதித் தேர்வு, மீள்பார்வைத் தேர்வு, மாதிரி பொதுத் தேர்வு என்று நடத்தினாலும், நேரில் வகுப்புகளில் ஆலோசனைகள் வழங்கினாலும் தேர்வு பற்றிய பயம் மாணவர்களிடத்தில் தொற்றிக் கொண்டுதான் இருக்கும்.
 அது மட்டுமா...? பெற்றோர்கள், பத்திரிகைகள், தொண்டு நிறுவனங்கள் எல்லாம் ஒருநாள் கூட்டம் போட்டுச் சொன்னாலும் தேர்வு பயம் மாணவர்களை விட்டபாடில்லை!
 இது ஏன் என்பதற்குச் சரியான ஒரே காரணம் உளவியல் சார்ந்த எண்ணமாகத்தான் இருக்க முடியும். இந்த பயம் ஏறக்குறைய 90 சதவீத மாணவர்களிடம் உண்டு என்பதுதான் நிஜம்!
 சரி... இதற்கான தீர்வுகளாக கல்வித்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற நிபுணர்கள் - என்ன கூறுகிறார்கள்?
 மாணவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது பொதுத்தேர்வு என்பது வழக்கமான தேர்வுகளில் ஒன்றுதான் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதில் தெளிவு பெற்றுவிட்டால் பாதி பயம் போய்விடும்!
 தேர்வுக்கான கால அட்டவணை ஒரு மாதம் முன்பே அறிவிக்கப்பட்டுவிடும். இதன் பிறகு தான் மாணவர்கள் சரியாகத் திட்டமிட வேண்டும்.
 ஏற்கெனவே படித்துவிட்ட பாடங்களின் குறிப்புகளைத் தேர்வின் கால அட்டவணைப்படி வரிசைப்படுத்த வேண்டும்.
 இதில் கடைசியாக வருகின்ற பாடப் பிரிவுகளிலிருந்து இரண்டிரண்டு நாள்கள் என்று கணக்கிட்டு அதிலிருந்து படிக்கத் தொடங்க வேண்டும். அதாவது கலைப்பாடங்கள்தான் கடைசியாக வரும். அவற்றை முதலில் தொடங்கி பின்னோக்கி, பாடப் பிரிவுகளைப் படிக்க வேண்டும்.
 முதலில் மொழிப் பாடங்கள் தேர்வுதான் வரும். பாடங்களின் குறிப்புகளைத்தான் படிக்க வேண்டுமே தவிர ஒவ்வொரு பாடத்தையும் ஆழ்ந்து படிக்கக் கூடாது. குறிப்புகளைப் பார்த்தாலே அந்தப் பதிலின் முழுவிவரமும் புரிந்து விடும். இதை தங்ஹக் ஹற்
 ஞ்ப்ஹய்ஸ்ரீங் என்பர்.
 தேர்வுக்கு முன்பு மாணவர்கள் மூலமாகவோ அல்லது வெளி நபர்கள் மூலமாகவோ வரும் எந்த வதந்திகளையும் நம்பக் கூடாது. வேலை மெனக்கெட்டு ஒரு மாணவன் ஓடிவந்து ""டேய்.. இந்தக் கேள்வி வருகிறது.. அதற்குப் பதில் தெரியுமா?'' என்று குழப்பியும் மிரட்டியும் விடுவான். இதைக் கட்டாயம் அலட்சியம் செய்ய வேண்டும்!
 தேர்வு நடக்கும் முந்திய இரவு 11 மணிக்கெல்லாம் படுத்துத் தூங்கிவிட வேண்டும்.
 ஆனால், விடியற்காலை 5 மணிக்கு எழுந்து அன்றைய தேர்வுப் பாடத்தின் குறிப்புகளைப் பார்வையிட வேண்டும். 8 மணியானால் எல்லாவற்றையும் தூர எறிந்துவிட்டு, தேர்வுக்குத் தேவையான ஹால் டிக்கெட், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் போன்ற பொருள்களை எடுத்துக்கொண்டு காலை உணவையும் முடித்துவிட்டு பெற்றோரின் ஆசியைப் பெற்றும், கடவுள் நம்பிக்கை உண்டானால் ஒரு நிமிடம் கடவுளை நினைத்துவிட்டும் தேர்வு நடைபெறும் இடத்துக்கு அரை மணி நேரம் முன்னதாகவே சென்றுவிட வேண்டும்.
 ""நான் படித்திருக்கிறேன், எனக்கு பதில் தெரியும், எழுதி விடுவேன்'' என்ற எண்ணத்துடன் தேர்வுக்குண்டான வகுப்பறைக்குச் செல்ல வேண்டும்.
 வினாத்தாளைப் பெற்ற பின்பு படிப்பதற்காக ஒதுக்கி இருக்கும் பத்து நிமிடத்தில் கேள்விகளை ஒருமுறைக்கு இரு முறை நன்றாகப் படித்து, கேள்வியின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். வேகத்தில் கேள்வியைத் தவறாகப் புரிந்துகொண்டு விட்டால் எழுதும் பதிலும் தவறாகிவிடும்.
 பின்பு நிதானமாகத் தெரிந்த கேள்விகளுக்கு முதல் பக்கத்தில் அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும். கடைசியில் தெரியாத கேள்விகள் என்று கட்டாயம் இருக்கும். அதை ஏதாவது ஒரு அனுமானம் கொண்டு பதிலை எழுதிவிட வேண்டுமே தவிர அதைத் தொடாமல் விடக்கூடாது!
 மிக முக்கியமானது தேர்வு முடிந்தவுடன் தேர்வு எண், பக்க எண், கேள்வி எண் எல்லாம் சரியாக இருக்கின்றனவா என்று திருப்பிப் பார்த்து வரிசைப்படுத்திக் கட்டிக் கொடுக்க வேண்டும். இதை மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொடுக்க வேண்டும்.
 தேர்வு முடிந்தவுடன் அதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் அடுத்த தேர்வுக்கான ஆயத்தத்தில் ஈடுபட வேண்டும்.
 எல்லாவற்றையும்விட இரண்டு முக்கிய விஷயங்களை மாணவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். ஒன்று தங்களின் உடல் நலம் காக்கப்படுதல். இரண்டாவது தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தமது பிற்கால வாழ்க்கை என்று எண்ணக்
 கூடாது. நல்ல மதிப்பெண் கிடைத்தால் நல்ல கல்லூரிப் படிப்பு. இல்லையெனில், தொழில் சார்ந்த ஆயிரம் படிப்புகள் இருக்கின்றன.
 பெற்றோர்களும் தமது குழந்தைகளுக்கு இதை எடுத்துச் சொல்ல வேண்டும். மாறாக மதிப்பெண்ணைக் குறி வைத்து தொந்தரவு செய்யக்கூடாது.
 வாழ வழி ஆயிரம் உள்ளது. மாணவர்களுக்குத் தேவை தேர்வு மதிப்பெண் மட்டுமே அல்ல. கடுமையான உழைப்பும், முயற்சியுமே வாழ்க்கையில் வெற்றியைப் பெற்றுத் தரும்!
 ஆகவே தேர்வு பயமும் வேண்டாம், தேர்விலும் பயம் வேண்டாம். தன்னம்பிக்கையை மட்டும் இழக்க வேண்டாம்!
 -கலைநன்மணி மகிழ்நன், சென்னை.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com