கொசு

காசில்லாமல் ஊசிபோடும்கருணையாளன் நான்
கொசு

 காசில்லாமல் ஊசிபோடும்
 கருணையாளன் நான்
 கணக்கில்லாமல் முட்டையிட்டுக்
 குஞ்சு பொரிப்பேன்
 காதுக்கருகில் வந்து நின்று
 பாட்டுப் பாடுவேன்
 இரவினிலே அனைவரது
 தூக்கத்தைக் கெடுப்பேன்
 வீட்டுக்குள்ளே அடைசல் இருந்தால்
 கொண்டாட்டம்தான் எனக்கு
 தேங்கி நிற்கும் நீரினிலே
 பல்கிப் பெருகுவேன்
 மலேரியா காய்ச்சலை நான்
 கொண்டு வருவேன்
 செயற்கையாக என்னை அழிக்க
 முயற்சிக்க வேண்டாம்.
 கொசுவர்த்தியும் ஆல் அவுட்டும்
 கொஞ்சநேரம்தான்
 வீட்டுக்குள்ளே குப்பைகளைக்
 குவித்திடாதீங்க
 ஒட்டடைகள் சேர்ந்திடாமல்
 பார்த்துக் கொள்ளுங்க
 சுற்றுப்புறத்தைத் தூய்மையாக
 வைத்துக் கொள்ளுங்க
 கழிவுநீரை எட்டத்திலே
 கொண்டு விடுங்க
 வழிமுறைகள் சொல்லிப்புட்டேன்
 காத்துக் கொள்ளுங்க.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com