முத்துக் கதை: விறகு வெட்டி

ஓர் ஊரில் நல்லான் என்ற விறகு வெட்டி ஒருவன் இருந்தான். அவனுக்கு விறகு வெட்டுவதைத் தவிர வேறு தொழில் எதுவும் தெரியாது. காட்டுக்குச் சென்று தூக்க முடிந்த அளவுக்கு மரக்கிளைகளை வெட்டி எடுத்து வருவான்.
முத்துக் கதை: விறகு வெட்டி

ஓர் ஊரில் நல்லான் என்ற விறகு வெட்டி ஒருவன் இருந்தான். அவனுக்கு விறகு வெட்டுவதைத் தவிர வேறு தொழில் எதுவும் தெரியாது. காட்டுக்குச் சென்று தூக்க முடிந்த அளவுக்கு மரக்கிளைகளை வெட்டி எடுத்து வருவான். அவற்றை விற்று வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் செல்வான். அவனது மனைவியும், இரு குழந்தைகளும் இவனது உழைப்பை நம்பித்தான் வாழ்ந்து வந்தனர்.

ஒருநாள் ஆற்றின் கரையோரமாக இருந்த ஒரு மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தான். அப்போது அவனது இரும்புக் கோடரி தவறி ஆற்றில் விழுந்துவிட்டது. அவனால் கோடரியைத் தேட முடியவில்லை.

என்ன செய்வது என்று கவலையோடு அமர்ந்திருந்தான். அப்போது ஒரு தேவதை எதிரில் தோன்றியது. நல்லானைப் பார்த்து "ஏன் அழுகிறாய்?' என்று கேட்டது.

""என் தொழிலுக்கு மூலதனமான கோடரி ஆற்றில் விழுந்துவிட்டது. இனி பிழைப்புக்கு என்ன செய்வேன்?'' என்று கூறி மேலும் பலமாக அழுதான்.

ஒரு தங்கக் கோடரியை எடுத்து வந்து நல்லானிடம் கொடுத்தது.

""இது தங்கக் கோடரி. இது என்னுடையது அல்ல'' என்றான் நல்லான்.

மறுபடியும் ஆற்றில் குதித்து ஒரு வெள்ளிக்கோடரியை எடுத்து வந்து நல்லானிடம் கொடுத்தது தேவதை.

""இது வெள்ளிக் கோடரி. இதுவும் என்னுடையது அல்ல'' என்றான் நல்லான்.

மீண்டும் நீரில் குதித்து ஒரு இரும்புக் கோடரியை எடுத்து வந்து கொடுத்தது தேவதை.

""இதுதான் என்னுடையது'' என்று நன்றி கூறிப் பெற்றுக் கொண்டான் நல்லான்.

நல்லான் உண்மை பேசியதால் மகிழ்ச்சியடைந்த தேவதை, தங்கம், வெள்ளிக் கோடரிகளையும் அவனிடமே கொடுத்து ""விற்றுப் பிழைத்துக்கொள்'' என்று சொல்லி மறைந்து போனது.

கோடரிகளை விற்றுப் பெரும் பணக்காரனானான் நல்லான். ஆனால் விறகு வெட்டும் தொழிலை மறக்கவில்லை.

கோடரிக்குப் புதிய பிடி போடலாமென்று முற்றிய கிளை தேடிக் காட்டுக்குச் சென்றான். வெயிலாக இருந்தபடியால் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருந்தான்.

""நல்லான் கோடரிக்குப் பிடி போட வேண்டுமா? இதோ என்னிடமிருந்து முதிர்ந்த கிளையினை வெட்டிக்கொள்'' என்றது மரம்.

நல்லான் திடுக்கிட்டான்.

""என் நண்பனே. உன்னை வெட்டுவதற்குரிய ஆயுதம் செய்ய உன் உடலில் ஒரு பகுதியைத் தருகிறாயா? உனக்கு வருத்தமாக இல்லையா?''

""எனக்கு என்ன வருத்தம் நல்லான். பிறருக்கு உதவுவதில்தான் மகிழ்ச்சியே அடங்கியுள்ளது. எங்களை என்ன மனிதர்களைப்போல் சுயநலவாதிகள் என்று நினைத்துக் கொண்டாயா? வா. வேண்டிய மட்டும் கிளைகளை வெட்டிச் செல்''.

நல்லானுக்கு உள்ளம் நெகிழ்ந்து விட்டது. மரத்தைக் கட்டித் தழுவிக் கொண்டான்.

""நண்பா, நீ என் கண்களைத் திறந்துவிட்டாய். அய்யோ எவ்வளவு மரங்களை வெட்டி விட்டேன். இனி மரங்களை அழிக்க மாட்டேன். நான் வெட்டிய மரங்களைப்போல் பல மடங்கு மரங்களை நடுவேன். அருமை நண்பனே. போய் வருகிறேன்'' என்று மரத்திடமிருந்து விடைபெற்றான் நல்லான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com