கதைப்பாடல்: நூல் காக்க!

படிப்பது சுகம் என நினைப்பார் -அவரைத் தடுத்து நிறுத்த முடியாது;
கதைப்பாடல்: நூல் காக்க!

படிப்பது சுகம் என நினைப்பார் -அவரைத்

தடுத்து நிறுத்த முடியாது;

எடுத்துக் கொண்டு போவார் - குறிப்பு

எடுத்ததும் திருப்பிக் கொடுப்பார்!

அரசின் நூலகம் எல்லாம் - உறுப்பினர்

காப்புத் தொகையும் பெற்றிடும்;

இரவல் பெற்ற நூலையும் - உரிய

தேதியில் கொடுத்திட வேண்டும்!

நூலுக் குரியவர் அதிலே - தான்

வாங்கிய தேதியைக் குறிப்பார்;

பெயரும் எழுதி வைப்பார் - அது

யாருடை யதெனும் அடையாளம்!

சங்கர லிங்க நாடார் - வீட்டில்

தங்கி இருந்தார் மகாத்மா!

நெருங்கிப் பழகிய காந்தியார் - அவருடைய

புத்தகம் கேட்டுப் பெற்றார்!

புத்த கத்தையும் நாடார் - விரும்பி

படிக்கட்டும் என நினைத்தார்;

"பாக்கியம் எனக்கு' என்று - நாடார்

பெருமை பட்டுக் கொண்டார்!

நான்கு திங்கள் கழித்து - ஒருநாள்

அஞ்சலில் ஒரு பொதி வந்தது;

வாங்கிப் பிரித்துப் பார்த்தால் - அதிலே

புத்தகம் ஒன்று இருந்தது!

நூலுக்குள்ளே கடிதம் - ஒன்று

இருந்ததை எடுத்துப் படித்தார்;

மனநிறை வுடனே நகைத்தார் - நாடார்

பக்கத்திலிருந்தவர் கேட்டார்;

""காந்தி யாருக்கு நீவிர் - புத்தகம்

அன்பளிப்பாகவே கொடுத்தீர்;

என்ன காரணத் தினாலதை - அவரும்

திருப்பி அனுப்பி வைத்தார்?''

""என்னுடை நூல்களில் எல்லாம் - நான்

எழுதும் வாசகம் இதுதான்;

கண்போல் காக்கிற நூலை - படிப்பவர்

திருப்பி தந்திட வேண்டும்....

இந்தக் குறிப்பும் பார்த்து - மகாத்மா

எனக்கு விடுத்திருக் கின்றார்;

...எத்தனை பேர்க்கு இதுபோல் - பொறுப்பு

உண்டென...நாடார் கேட்டார்! 

இப்படியாகவே நாமும் - பிறரிடம்

பெற்றதைத் திருப்பிக் கொடுப்போம்;

காந்தியாரிடம் கற்றதை - வாழ்வில்

நாமும் கடைப்பிடித் திடுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com