பசுமைக்குடில்!

""இதுல நினைக்கிறது என்ன இருக்கு சேகர். புத்தகத்துல இருந்தது. பாடம் நடத்தினாரு'' என்று கிண்டலாக சொல்லி சிரித்தான் வாசு.
பசுமைக்குடில்!

""டேய் வாசு, நம்ம அந்தோணி சார் "புவி வெப்பமாதல்' குறித்த பாடம் நடத்தினாரே அதப்பத்தி என்னடா நினைக்கிறே?''

""இதுல நினைக்கிறது என்ன இருக்கு சேகர். புத்தகத்துல இருந்தது. பாடம் நடத்தினாரு'' என்று கிண்டலாக சொல்லி சிரித்தான் வாசு.

""இல்ல வாசு, நாம பத்தாவது படிக்கிறோம். ஆனா கொஞ்சம்கூட பொறுப்பில்லாம இருக்கோம். அவர் நடத்தின பாடம் வேணா நம்ம மனசுல பதியாம இருக்கலாம். ஆனா, பூமியைப் பத்தியும், ஓசோன் ஓட்டையைப் பத்தியும் அவர் சொன்னத என்னால ஜீரணிக்க முடியலடா''என லேசான மன வருத்தத்துடன் பேசிக் கொண்டிருந்தான் சேகர்.

""டேய்! இங்க வாங்கடா, நம்ம சேகரு ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு அழறாண்டா''என அருகில் விளையாடிக்கொண்டிருந்த நண்பர்களை அழைத்தான் வாசு.

 கூட்டம் கூடியது. எல்லோரும் சேகரைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

""டேய்! உங்களுக்கெல்லாம் விளையாட்டா தெரியற இந்த விஷயம், விளையாட்டு இல்லே...ரொம்ப சீரியஸான விஷயம். அத புரிஞ்சுக்கோங்க''

""என்னடா சேகர், ஏதேதோ உளர்ற. அப்படி என்ன சீரயஸ் அது... சொல்லேன். அதையும்தான் கொஞ்சம் கேட்போம்.'' என குழுவாக கேட்டார்கள்.

 ""இன்னைக்கு எல்லோரும் பேசிக் கொண்டிருப்பது "புவி வெப்பமாதல்' அதாவது "குளோபல் வார்மிங்' பத்திதான். இந்த குளோபல் வார்மிங் பிரச்சனையால் பசுமைக் குடில்ல வாயு அதிக அளவுல வெளியேறும். அப்படி வெளியேறுவதால் ஓசோன் படலத்துல ஓட்டை விழுந்து, புற ஊதாக் கதிர்களும் நேரடியாக பூமியைத் தாக்கும்.''

 ""பூமியைத் தாக்கினா நமக்கு என்னடா நஷ்டம்?'' என அப்பாவியாகக் கேட்டான் மோகன்.

 ""பூமியைத் தாக்கினா என்ன நஷ்டமா?‘' என நண்பர்களை ஓருசேரப் பார்த்து, ""பூமியில பறவைகள், பூச்சிகள், விலங்குகள், தாவரங்கள், எல்லாத்துக்கும் அடுத்து மனிதர்களும் அதிகமா இருக்காங்க. ஓசோன் ஓட்டையால மனிதர்களுக்கு தோல் புற்று நோய்ல ஆரம்பித்து, வித்தியாசமான உயிர்க்கொல்லி நோய்கள் எல்லாம் ஏற்படும்னு விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்யறாங்க''

 ""ஆ! இதுல இத்தனை பெரிய பிரச்னை இருக்கா? சார் பாடம் நடத்தும்போது கூட இவ்வளவு சொல்லலையே? உனக்கெப்படித் தெரியும்?''

 ""சார் பாடம் நடத்தினபிறகு எனக்கு அதே ஞாபகமாக இருந்தது. அதனால் எங்க அக்கா கிட்டே அதப்பத்திக் கேட்டேன். அவங்கதான் இணைய தளத்தில இருந்து இதப்பத்தி நிறையச் செய்திகள் எடுத்துத் தந்தாங்க. அதப் படிச்சதிலேர்ந்து நம்மால முடிஞ்ச அளவுக்கு நம்ம பூமிக்கு ஏதாவது நன்மை செய்யணும்னு தோணிச்சி'' என்றான் சேகர்.

கிண்டல் செய்த நண்பர்களுக்கும் ஒருவித சோகம் தொற்றிக் கொண்டது.

""சேகர்! நம்மைப் போன்ற மாணவர்களால் இந்தப் பெரிய பூமியைக் காப்பாற்ற முடியுமா?'' எனக் கேட்டனர்.

 ""நிச்சயமா முடியும்! மாணவர்கள் சக்தி....,மகத்தான சக்தி!''என ஆவேசமாகக் கூறினான் சேகர்.

எல்லோர் முகத்திலும் புன்னகை அரும்பியது. கரங்கள் ஒன்று சேர்ந்தன.

 ""சரி! நாம என்ன செய்யணும். அதையும் நீயே சொல்லு.''

""வீடுகள், அலுவலகங்கள், கார், பேருந்து போன்றவைகளில் பயன்படுத்தும் ஏ.சி...,பிரிட்ஜ் போன்ற சாதனங்களிலிருந்து வெளிவரும் குளோரோ புளுரோ கார்பன் என்று சொல்லும் வாயுதான் இந்தப் புவி வெப்பமாதலுக்கு முக்கிய காரணம்னு விஞ்ஞானிகள் கணிச்சிருக்காங்க''

பூமியைப் பாதுகாக்கும் படலத்துடன் இந்த வாயு வினைபுரிந்து அதை ஓட்டை விழச் செய்வதுதான் இதோட வேலை. அதனால கட்டுக்கடங்காத வெப்பம் பூமியைத் தாக்குகிறது.''

""நம்ம அக்னி நட்சத்திர வெப்பத்தைப் போலவே!''

""அக்னி நட்சத்திர வெயில் எல்லாம் சுண்டைக்காய் போலத்தான். இந்த வெப்பம் அதிகரிச்சா எதிர்காலத்துல துருவப் பகுதியிலுள்ள பனிமலைகள் உருகும்! கடல் நீர் மட்டம் உயரும்! அதனால பல்வேறு கண்டங்கள் அழிந்தே போகும். போன தடவை சுனாமி வந்ததே அது கூட புவி வெப்பமாதலாலதான்னு சொல்றாங்க''

""சேகர்! நாம என்ன செய்யணும்னு இன்னும் சொல்லலையே''

 ""இருங்க! இருங்க! சொல்றேன். நாம முழு ஆண்டு பரிட்சை முடிஞ்ச உடனே வீட்டுல லீவை கழிக்கறதுக்கு என்ன கேக்கலாம்?''

 ""பைக்!''

 ""போடா மடையா! நமக்கு லைசன்úஸ தரமாட்டாங்க...,அதுவும் இப்ப நாம பத்தாவதுதான் படிக்கிறோம்! இப்ப நமக்கு எதுக்கு பைக்? அதுல வர்ற புகையும் காற்றை மாசு படுத்தும்!

 ""சரி! நீயே சொல்லு! என்ன கேக்கலாம்?''

 ""சமீபத்துல புதுச்சேரியில் புயல் தாக்குதல்ல சுமார் 5லட்சம் மரங்களுக்கு மேல பட்டு போயிடுச்சு. அத ஈடுகட்டும் விதமா, அந்நகரம் முழுக்க மரக்கன்றுகள் நட்டு வளர்க்க ஏற்பாடு செய்யணும்''

 ""அப்படின்னா அதுக்கு நாம ஒரு இயக்கத்தை உருவாக்கலாமே'' என யோசனை சொன்னான் மோகன்.

 ""அதுக்கு நான் "பசுமைக்குடில்'னு பேரு வச்சிருக்கேன். எப்படி இருக்கு''

 ""சரியான பொருத்தமான பெயர்''

 எல்லோரும் வரவேற்றனர்.

 ""நாம மரங்களைக் காப்பாற்றுவதன் மூலமாக நம்ம பூமியையும் காப்பாத்தலாம்''

 எல்லோருடைய கரங்களும் ஒன்றிணைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com