விவேகானந்தரின் பொன்மொழிகள்

முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி உனக்குத் தானே வரும்.

 * முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி உனக்குத் தானே வரும்.

*அறிவுச் சுரங்கத்தைத் திறப்பதற்கான திறவுகோல் மன ஒருமைப்பாடாகும்.

* நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகிவிடும்.

 * துக்கம் என்பது அறியாமையின் காரணமாகத்தான் ஏற்படுகிறது. வேறு எதனாலும் அன்று.

 * அவரவர் விதி அவரவர் கையிலே இருக்கிறது.

* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை. அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருத்தல் வேண்டும்.

 * கோழைதான் பாவம் செய்கிறான். தைரியசாலி ஒருபோதும்  செய்வதில்லை.

 * கல்வி, கல்வி, கல்வி அது ஒன்றே இப்போது நமக்குத் தேவை.

 * ஆசை இருக்கும்வரை உண்மையான இன்பம் வராது.

 * உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com