தீபாவளியே வா வா...!

தீபாவளியே வா வா...!

தீபாவளியே வாவா - எங்கள்தித்திக்கும் அன்பினைக் கூட்டவா

தீபாவளியே வாவா - எங்கள்
தித்திக்கும் அன்பினைக் கூட்டவா
கோபுரம் போல உயர்ந்திடவே - எங்கும்
குலவும் நலத்தினைக் கூட்டவா!

மத்தாப்புப் போலவே ஒளிபெற்று - மக்கள்
மண்ணில் மகிழ்ந்திட வாவா
சொத்து சுகங்களைக் கொண்டுவா - வீட்டில்
சுற்றமும் நட்பும் மகிழவா!

புதிய ஆடை அணிந்தின்று - மகிழ்வு
பூத்திட உடனே ஓடிவா
விதவித மான உணவுகள் - செய்து
வீட்டை இன்பமாய் ஆக்கவா!

தீபாவளி நல்ல தீபாவளி - நாட்டில்
தித்திக்கும் திருவிழா தீபாவளி
ஆவலோடு ஏற்றிடுவோம் - தீபம்
அணையா திருக்கக் காத்திடுவோம்!

தீபாவளியே வாவா - எங்கள்
தித்திக்கும் அன்பினைக் கூட்டவா
கோபுரம் போல உயர்ந்திடவே - எங்கும்
குலவும் நலத்தினைக் கூட்டவா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com