பகைவனும் நண்பனே!

தண்ணீர் தேடி தவளையொன்று தத்திச் சென்றது - வெயில் தணலைப் போலக் கொதித்ததினால் 
பகைவனும் நண்பனே!

தண்ணீர் தேடி தவளையொன்று 
தத்திச் சென்றது - வெயில் 
தணலைப் போலக் கொதித்ததினால் 
தரையும் சுட்டது!

தங்க ஒண்ணா தரை சூட்டால் 
தத்த முடியலே - சற்று 
தங்கி ஓய்வு எடுத்துச் செல்ல
நிழலும் கிடைக்கலே...

சுற்றும் முற்றும் நிழலிருக்கா
என்று பார்த்தது! - கண்ணில் 
சற்று தொலைவில் சிறதளவே 
நிழலும் தெரிந்தது!

பாய்ந்து சென்று தவளையந்த 
நிழலில் நின்றது! - பாம்பின் 
படத்தின் நிழல் என்பதனைப் 
பின்னர் அறிந்தது!

இறையருள்தான் இரையை எனக்கு 
இங்கு கொணர்ந்தது - நன்றி 
என்று பாம்பு தவளைதன்னைப் 
பிடிக்கப் பார்த்தது!

எப்படியும் வெப்பத்தினால் 
இறப்பது உண்மை - ஆனால் 
அப்படி நான் இறப்பதனால் 
யாருக்கு நன்மை? ...

இறக்கும் போதும் மற்றவர்க்கு 
உதவ எண்ணியே - வந்தேன் 
என்னை உண்டு வாழ்கவென்று 
தவளை சொன்னது!

நல்ல உள்ளம் உள்ளவன் நீ 
நல்லா வாழணும்! - உன்னை 
நல்ல தண்ணீர்க் குளத்திலின்றே 
நானே சேர்க்கணும்! 

என்று நாகம் படத்தைத் தாழ்த்தி 
தலையை காட்டிட - உடன் 
நன்றி கூறி தவளை ஏறி 
தலையில் அமர்ந்தது! 

பாம்பு மெல்ல ஊர்ந்து சென்று 
பக்கத்தில் உள்ள - நல்ல 
பளிங்கு தண்ணீர்க் குளத்திலிட்டு 
பார்த்து மகிழ்ந்தது!

பாம்பு அண்ணே! உங்களை நான் 
என்றும் மறந்திடேன் - என்று 
தேம்பி அழுது தவளையதற்கு 
நன்றி சொன்னது!

பழகும்போது பாசத்துடன் 
பழகிப் பாருங்க - நம்ம 
பகைவர் கூட நண்பராக 
மாறு வாருங்க!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com