பாராட்டுப் பாமாலை! - 21: எளிமை, நேர்மை, கனிவு!

என்னிடம் படித்தான் ஹரிராம் என்பான்ஏழ்மைப் பெற்றோர் தினக்கூலிதான்!உன்னதப் படிப்பு உயர்ந்த மதிப்பெண்!
பாராட்டுப் பாமாலை! - 21: எளிமை, நேர்மை, கனிவு!

என்னிடம் படித்தான் ஹரிராம் என்பான்
ஏழ்மைப் பெற்றோர் தினக்கூலிதான்!
உன்னதப் படிப்பு உயர்ந்த மதிப்பெண்!
உயர்நிலைக் கல்வி முடிவில் வெற்றி!

தன்னிலை உணர்ந்தே தனியார் பேருந்தில் 
தினமும் நடத்துனர் பயிற்சி பெற்றான்!
இன்னிலை ஏணிப் படியாகியது!
அரசுப் பேருந்தில் நடத்துனர் ஆனான்!

அன்பால் மக்களைக் கவர்ந்தான் நாளும்!
எளிமை, நேர்மை, கனிவும் கொண்டு 
பண்பால் பயணியரிடையே நற்பெயர்
எடுத்தான் நாளும் நடத்துனர் ஹரிராம்!

ஒருநாள்.....

வங்கியில் நகைக்கடன் வாங்கி வந்த 
வடிவேல் ஏறினான் பேருந்தில்தான்! - தங்க
நகைகள் மற்றும் பற்பல பொருட்கள் -மகள் 
திருமணத்திற்கு வாங்கிடத் திட்டம்!....

.... அங்கம் குளிர மகளின் அன்பில் ...
அதற்குள் ஊர வர இறங்கியும் விட்டான்!....
எங்கோ பணப்பையை இழந்து விட்டான்!
இருந்த நெருக்கத்தில் எடுத்தவர் எவரோ?

பே ருந்தும் போனது!....தவித்தான் வடிவேல்!...
பெற்ற பெண் ணிற்கோ கல்யாணம்!
சீரும் சிறப்பும் செய்ய எண்ணி 
சேர்த்த கடன் தொகை காணாத் துன்பம்!

பதறிய வடிவேல் தெய்வத்தை நம்பி 
பார்த்தவ  ரிடமெலாம் விசாரித்தானே!
"பார்க்கவில்லை'...."தெரியாது'....என்றே 
அனைவரும் கூறினர்....வாடினான் வடிவேல்!

பயணம் முடிந்த பேருந்தில் தான் 
பார்த்தான் ஹரிராம்!.... எடுத்தான் பையை!
கயமை எண்ணம் அவனுக்கில்லை!...
கத்தைக் கத்தையாய்ப் பெருந்தொகை கண்டு!

கண்ட பையை அலுவ லகத்தில் சேர்த்தான்!
விரைவாய்க் கிடைத்த முகவரிக்கு
கை பேசியில் உடனே தொடர்பு கொண்டான்!- நற்
செய்தியைக் கேட்ட வடிவேல் மகிழ்ந்தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com