அரங்கம்: மாண்பு!

அம்மா - குணா!....செட்டியார் கடையிலே அஞ்சு  ரூபாய் சோப்பு ரெண்டு வாங்கிட்டு வா!.....
அரங்கம்: மாண்பு!


காட்சி - 1
இடம் - குணாளன் வீடு,   மாந்தர் - குணாளன், அம்மா, அப்பா.

அம்மா - குணா!....செட்டியார் கடையிலே அஞ்சு  ரூபாய் சோப்பு ரெண்டு வாங்கிட்டு வா!.....
குணாளன் - சரி, காசு குடு!....
அம்மா - அப்பாகிட்டே வாங்கிக்கோ!....
குணாளன் - (அப்பாவிடம் போய்...) அப்பா!....பத்து ரூபாய் தாப்பா!....அம்மா சோப்பு வாங்கி வரச்சொன்னாங்க....
அப்பா: (சட்டைப் பையிலிருந்து காசை எடுத்து) இந்தா...
(அப்பா கொடுத்த பத்து ரூபாய்த்தாளை வாங்கிக்கொண்டு  கடைக்கு ஓடுகிறான்)


காட்சி - 2
இடம் - செட்டியார் மளிகைக் கடை   மாந்தர் - செட்டியார், குணாளன்.

குணாளன் - ஐயா, அம்மா ரெண்டு சோப்பு வாங்கி வரச்சொன்னாங்க..... காசு அப்புறமாத் தரேன்னு சொன்னாங்க.....
(செட்டியார் யோசிக்கிறார்....."அவர்கள் ஏழைகள் தான்....ஆனால் கடனில் சாமான் வாங்க மாட்டார்கள்.... அப்பப்பக் காசு கொடுத்துத்தான் வாங்குவார்கள்..... பையன் இப்படிச் சொல்லிக் கேட்கிறான்.....இப்போ என்ன செய்யறது?....' என்று நினைத்துக் கொண்டே இரண்டு சோப்புகளைத் தருகிறார்....கணக்கு எழுதி வைத்துக் கொள்கிறார்....)   


காட்சி - 3
இடம் - பள்ளிக்கூடம்,   மாந்தர் - சத்யா, குணாளன்.

குணாளன் - சத்யா!....,இன்று பள்ளிக்கூடம் விட்டவுடன் ஹோட்டலில் போய் சாப்பிடுவோம்!.....ரொம்ப நாளாகவே எனக்கு ஆசை!....நடராஜன் அடிக்கடி அங்கே போய் சாப்பிடுவான். அதான் எனக்கும் அதே ஆசை!....
சத்யன் - ஏதுடா காசு?....அங்கே போனால் எப்படியும் பத்து ரூபாய் வேணுமே!.......யார் தந்தார்கள்?....
குணாளன் - அம்மாதான் காலையிலே தந்தாங்க.....அதான்!...
(சத்யனுக்கு சந்தேகம்....ஏனெனில் குணாளன் அப்பாவும், அம்மாவும் கையில்காசு தந்ததில்லை!....--(மனதிற்குள்....) இது என்ன இது புதுசா இருக்கே!....என்னன்னு கண்டுபிடிக்கணும்!)
சத்யன் - அந்த ஓட்டலுக்கு நான் வரலேடா!.....எனக்கு வயிறு சரியில்லே....
குணாளன் -  நான் மட்டும் எப்படிடா சாப்பிடறது?..... எனக்கு தனியா ஓட்டலுக்குப் போய் பழக்கமில்லேடா.....நீயும் வாடா!.....
சத்யன் - சரி, நான் வரேன்......ஆனா இந்தக் காசு உனக்கு எப்படி வந்தது? அதைச் சொல்லு முதல்லே!.....அதைச் சொல்லிட்டா நான் உங்கூட வருவேன்....இல்லேன்னா வர முடியாது!..... 
குணாளன் - அம்மா சோப் வாங்க காசு தந்தாங்க....நான் செட்டியார் கடையிலே கடன் சொல்லிட்டு பத்து ரூபாயை நானே வெச்சிக்கிட்டேன்!.....இதோ பார்! (பத்து ரூபாய்த் தாளைக் காண்பிக்கிறான்)
சத்யன் - அம்மாவிடம் செட்டியார் கேட்
பாரே....அப்ப நீ மாட்டிக்குவே!....நீ ஒரு தப்பு செய்யத் தயாராயிட்டே!.....அம்மாவும், அப்பாவும் அடிப்பார்கள்....திட்டுவார்கள்!.....இனிமே உன்னை எதற்கும் நம்ப மாட்டார்கள்!.... வீட்டில் காசு தொலைஞ்சா உன்னை சந்தேகத்தோடு பார்ப்பார்கள்!....இதெல்லாம்.

அம்மாவும், அப்பாவும் அடிப்பார்கள்....திட்டுவார்கள்!.....இனிமே உன்னை எதற்கும் நம்ப மாட்டார்கள்!.... வீட்டில் காசு தொலைஞ்சா உன்னை சந்தேகத்தோடு பார்ப்பார்கள்!....இதெல்லாம் தேவையா?.... இது உனக்குப் பிடிச்சிருக்கா?....
குணாளன் - ஐயய்யோ!....ஆமாண்டா!.....தெரியாம செஞ்சுட்டேன்!.....பின்னால் நடக்கப்போவதைப் பற்றி நான் நினைக்கவே இல்லேடா!.... பயமாயிருக்குடா!....நான் மோசடி பண்ணிட்டேன்!.... யோசிக்காம முட்டாள்தனம் பண்ணிட்டேன்!....எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலேடா....இனிமே என்னை என் அப்பா, அம்மா ரெண்டு பேருமே நம்ப மாட்டாங்களா?...... (அழுகிறான்)
சத்யா - அழாதேடா!.....எந்தக் காரியம் செய்தாலும் யோசிக்கணும்டா....தப்பு செய்ய நினைக்கவே கூடாது!.... தப்பு செய்யற பழக்கம் வந்துடுச்சின்னா மாத்திக்கறது ரொம்பக் கஷ்டம்!...... அதுக்குள்ளே எல்லா அவதூறுகளும் வந்து சேர்ந்திடும்!.... 
குணாளன் - இப்ப என்னடா செய்யணும்!....சீக்கிரம் சொல்லுடா....
சத்யா - செட்டியார் கடைக்குப் போவோம்!.....உங்கிட்டே  இருக்கிற ரூபாயைக் கொடுத்து கடனை அடைச்சிடுவோம்!..... நீ அப்பா,அம்மாகிட்டே நடந்ததைச் சொல்லிடு!.... மன்னிப்புக் கேள்!.... அவங்க உன்னை நிச்சயம் மன்னிச்சிடுவாங்க....
குணாளன் - சரிடா....
( செட்டியார் கடைக்குச் செல்கிறார்கள். )
குணாளன் - ஐயா!.....காலையிலே கடனா சோப் வாங்கினேனே.....பத்து ரூபாய்க்கு!.... இந்தாங்க பத்து ரூபாய்!.....கணக்குலே எழுதியிருந்தா அடிச்சிடுங்க....!
செட்டியார் - ஓ! அதுவா!....இப்போதான் அம்மா வந்தாங்க சாமான் வாங்க!.....நீ கொடுக்க வேண்டியதைச் சொன்னேன்..... அவங்களே கொடுத்திட்டாங்க தம்பி!....
(--குணா மனதிற்குள்---- "அப்பாகிட்டேயிருந்து பத்து ரூபாயை வாங்கறதை அம்மா பார்த்தாங்களே..... அப்படியிருந்தும் ரூபாயைக் கொடுத்திருக்காங்களே.....காசு கொடுத்துத்தானே அனுப்பினேன்னு செட்டியார்கிட்டே சொல்லாம நான் வாங்கின கடனைக் குடுத்திருக்காங்களே.... அம்மா எப்படிப்பட்டவங்க!.....அவங்களுக்கு நல்ல பிள்ளையா நடந்துக்கலையே நான்!'---கண்களில் நீர்---)
சத்யா - குணா!.....அம்மாவைப் பார்த்தியா?....உன்னைக் காட்டிக் கொடுக்காம செட்டியாரிடம் எதுவும் சொல்லாம காசைக் கொடுத்திருக்காங்க.....நீ ஏதோ தப்பு செய்து விட்டாய் என்பது அவங்களுக்குத் தெரிந்து விட்டது!.... நீ போ!....உன் வீட்டுக்குப் போய் நான் சொன்னபடி எல்லாத்தையும் சொல்லி அவங்க கிட்டே மன்னிப்புக் கேள்!


காட்சி - 4
இடம் - குணாளன் வீடு,   மாந்தர் - குணாளன், குணாளனின் அம்மா, அப்பா.


(அப்பா ஒரு மேஜை அருகே உட்கார்ந்திருக்கிறார். அம்மா குணாளன் வருவதைப் பார்க்கிறாள்)
அம்மா - வா குணா!.....
குணாளன் - (கண்களில் நீருடன்) அம்மா!....இன்னிக்கு நான்ஒரு தப்பு பண்ணிட்டேம்மா!.....
அம்மா - என்ன தப்பு!.....சொல்லு!...
குணாளன் - காலையிலே அப்பா கொடுத்து பத்து ரூபாயை செட்டியார் கடையிலே நான் குடுக்கலே!.....சோப்பைக் கடனா வாங்கி வந்திட்டேன்.....
அப்பா - ரூபாயை என்ன பண்ணே?....
குணாளன் - எனக்கு ஹோட்டல்லே சாப்பிடணும்னு ஆசை வந்திடுச்சி!.... அந்தப் பத்து ரூபாய்க்கு தோசை சாப்பிடலாம்னு நெனைச்சேன்!....
அப்பா - சாப்பிட்டியா?
குணாளன் - இல்லேப்பா....என்னோட நண்பன் சத்யாவைக் கூப்பிட்டேன்....அவன், "ஏதுடா காசு'ன்னு கேட்ட உடனே எல்லாத்தையும் சொல்லிட்டேன்!.... அவன்தான் காசை செட்டியார் கிட்டே திருப்பிக் கொடுக்கச் சொல்லி.... எனக்கு நல்ல புத்தி சொன்னான். உங்ககிட்டே மன்னிப்பும் கேட்கச் சொன்னான்!....
அம்மா - பரவாயில்லையே.... நல்ல நண்பன்தான் உனக்கு!....
குணாளன் - செட்டியார் கிட்டே பணத்தைத் திருப்பிக் கொடுக்கப் போனபோதுதான் தெரிஞ்சுது!....நீயும் என்னைக் காட்டிக் கொடுக்கலேங்கிற விஷயம்....ரொம்ப சாரிம்மா....இனிமே இப்படி செய்யமாட்டேம்மா!....
அம்மா - அற்ப ஆசையின் விளைவைப் பார்த்தியா..... எனக்கு செட்டியார் கடனைக் கேட்டவுடன் புரிஞ்சு போச்சு!....உங்கிட்டே கேட்கலாம்னு இருந்தேன்... நீயே எல்லத்தையும் சொல்லி மன்னிப்பும் கேட்டுட்டே! ..... விடு இனி இப்படிச் செய்யாதே..... அற்ப ஆசைகளுக்கு,....இடம் கொடுக்காதே.... 
அப்பா - விடுடா!....நாங்க உன்னை மன்னிச்சுட்டோம்!.......தப்பைத் தப்புன்னு ஒத்துக்கிட்டு மன்னிப்புக் கேட்கறதுக்கு ரொம்ப நல்ல மனசு இருக்கணும்!.... நீ ரொம்ப நல்ல குழந்தை!.... போ!.... அம்மா டிபன் செஞ்சு வெச்சிருக்காங்க....போய்ச் சாப்பிடு!....
குணாளன் - அது மட்டுமில்லேப்பா!....இனிமே நீங்க என்னை நம்ப மாட்டீங்கன்னும் சத்யா சொன்னான்... ஏன் யாருமே நம்ப மாட்டாங்கன்னும் சொன்னான் அதான் எனக்கு ரொம்ப கவலையா ஆயிடுச்சு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com