நினைவுச் சுடர் ! குருதக்ஷிணை!

மார்ட்டினா நவரத்திலோவா ஆடிக்கொண்டிருந்தார்! வயது 18! ஆஸ்திரேலிய "க்ராண்ட் ஸ்லாம்!'விறுவிறுப்பான ஆட்டம்! வெற்றி வாகை! அன்றிலிருந்து புகழேணிதான்! இறங்கவே இல்லை! 332 வாரங்களுக்கு

மார்ட்டினா நவரத்திலோவா ஆடிக்கொண்டிருந்தார்! வயது 18! ஆஸ்திரேலிய "க்ராண்ட் ஸ்லாம்!'விறுவிறுப்பான ஆட்டம்! வெற்றி வாகை! அன்றிலிருந்து புகழேணிதான்! இறங்கவே இல்லை! 332 வாரங்களுக்கு அவர்தான் உலக மகளிர் ஒற்றையர் ஆட்ட நாயகி! 237 வாரங்களுக்கு அவர்தான் இரட்டையர் ஆட்டங்களிலும் நாயகி!
 உலகமே திகைத்தது! இதைப் பார்த்துக்கொண்டும், இவரது சாதனைகளைப் படித்துக்கொண்டிருந்தார் ஒரு ஸ்விஸ் நாட்டுப் பெண்மணி. மார்ட்டினா நவரத்திலோவாவின் பரம ரசிகை! ரசிகைக்கு ஒரு குழந்தை பிறந்தது! அந்தப் பெண்ணுக்கு ஆசையாக "மார்ட்டினா ஹிங்கிஸ்' என்று பெயர் வைத்தார்.
 தாயும், குழந்தையும் மார்ட்டினாவின் ரசிகைகள் ஆனார்கள்! வருடங்கள் உருண்டோடின. குழந்தை பெரியவளானாள்! அவளும் மார்ட்டினா நவரத்திலோவா போலவே உலக சாம்பியன் ஆனாள்! 209 வாரங்கள் உலக சாம்பியனாக ஆனார்! 90 வாரங்களுக்கு இரட்டையர் ஆட்டத்திலும் சாம்பியன்!
 ஆச்சரியமும், ஆனந்தமும் தாயின் முகத்தில்! ஒருமுறை நவரத்திலோவாவைச் சந்தித்தபோது அவரே தன் மானசிக குரு என்றும் அவருக்கு என்ன கைம்மாறு செய்வது என்பதும் தெரியவில்லை!'' என்று தெரிவித்தார் ஹிங்கிஸ்!
 அவரது தோளில் கையை வைத்து, "பங்கு பெறுவதும் சாதனை செய்வதும்தான் நல்ல குருதக்ஷிணை!' என்று மகிழ்ச்சியுடன் பாராட்டினார் மார்ட்டினா நவரத்திலோவா!
 - டி.எஸ்.ரமேஷ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com