பொருட்பால் - அதிகாரம் 80 - பாடல் 6
கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
- திருக்குறள்
துன்பம் வரும் நேரத்தில்
நண்பர் வந்து உதவினால்
நல்ல நண்பர் என்பார்கள்
நல்ல துணை அதுதானே
நல்ல நண்பர் யாரென்று
உறுதியாக அறிந்திட
அளக்கும் கோலாய் அமைவது
உனக்கு வரும் துன்பமே
-ஆசி.கண்ணம்பிரத்தினம்