பொன் மொழிகள்

ஆசைகள் எல்லையற்றதாய் இருந்தால், முயற்சிகளும் எல்லையற்றதாகிவிடும். வீணே சக்தியை விரயம் செய்யும்!
பொன் மொழிகள்

ஆசைகள் எல்லையற்றதாய் இருந்தால், முயற்சிகளும் எல்லையற்றதாகிவிடும். வீணே சக்தியை விரயம் செய்யும்!

- பால்கி

நாளை எவ்வாறு இருக்கும் என்று ஆராய்வதைத் தவிர்த்திடு! இன்று உனக்கு அருளப்பட்டதை லாபம் என மதிப்பிடு!

- ஹோரஸ்

ஒரு பொழுதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டு. நாம் செய்யும் நல்ல செயலே அது!

- மேட்டர்லிங்

நட்பின் சக்கரங்களில் இங்கிதமான, மரியாதை என்ற எண்ணெயை ஊற்ற வேண்டும் என்பது விவேகத்தின் படிப்பினை. காரலெட் மதி நுட்பம் என்பது சில வேளைகளில் உன்னை ஏய்த்துவிட வாய்ப்புண்டு. ஆனால் நாணயம் என்பது ஒரு போதும் உன்னை ஏய்க்காது! 

- ஆலிவர் கிராம்பெல்.

விரைவிலேயே புகழ் பெற்றுவிட்டவனுக்கு அதைக் காப்பாற்றிக் கொள்வது பெரும் பாரம்தான்! 

- வால்டேர்

ஓர் உதவியைச் செய்தால் அதை நினைவில் கொள்ளாதே. ஓர் உதவியை நீ பெற்றால் ஒரு போதும் அதை மறந்து விடாதே! 

- ஷிலோன்

பரிவு வீண் போவதில்லை! தோன்றிய இடத்தில் அது மாற்றம் செய்யாமல் போனாலும், சென்றடைந்தவரிடத்தில் அது நன்மை செய்வது உறுதி!  

- சிம்மன்ஸ்

நம்மை வெறுப்பவர்கள் பகைவர்கள் அல்லர்! நாம் வெறுப்பவர்களே பகைவர்களாகி விடுகிறார்கள்! 

- டோகோபர்ட் ரூன்ஸ்

உங்களைக் காட்டிலும் நல்லோர் உங்களைச் சுற்றி இருக்கவேண்டும்! அல்லது அத்தகைய  நல்லோரைச் சுற்றி நீங்கள் இருக்க வேண்டும்!  

- பாங்கில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com