அரங்கம்: பாலாவிடம் ஒரு பாடம்!

அம்மா! எனக்கு புதுசா வேற ஒரு உண்டியல் வாங்கித் தர்றியா..?
அரங்கம்: பாலாவிடம் ஒரு பாடம்!

காட்சி - 1
இடம் - மல்லிகா வீடு, மாந்தர் -மல்லிகா (குடும்பத்தலைவி)   பாலா, (மல்லிகாவின் 10 வயது இளைய மகன்) 
சிறுவன்,  வனஜா - மல்லிகா வீட்டு மாடியில் குடியிருப்பவர்,  மோகன் - சிலிண்டர் பாய்


பாலா :  அம்மா! எனக்கு புதுசா வேற ஒரு உண்டியல் வாங்கித் தர்றியா..?
மல்லிகா  : வாங்கித்தர்றேன்டா செல்லம்... சரி ! இப்ப உள்ளது என்னாச்சு கண்ணு...?
பாலா    : மோஸ்ட்லி பில்அப் ஆயிடுச்சிம்மா...
குலுக்கிட்டு குலுக்கிட்டே காயின் போட  வேண்டியிருக்கு...அதுவும் பத்து ரூபா காயின் போடவே முடியலே. உள்ளே இடிக்குதும்மா...
மல்லிகா  : அப்படியா செல்லம்..? அம்மா சாயங்காலம் கடைக்குப் போறேன். கட்டாயம் ஒண்ணு இல்ல ரெண்டு வாங்கித் தர்றேன்...போதுமா? இப்ப நீ படி... இன்னைக்கு ஸ்கூல்ல என்ன ஹோம் ஒர்க் கொடுத்தாங்க என் செல்லத்துக்கு...
பாலா    : மேக்ஸ்தான். எல்லாமே நானே போட்ருவேன். ஏதாவது சந்தேகம் இருந்தா மட்டும் கேக்கிறேன் சொல்லித் தர்றியாம்மா? 
மல்லிகா  : உன் அம்மாவுக்கு அதை விட என்ன வேலை? அம்மாவுக்கு கிச்சன்ல கொஞ்சம் வேலையிருக்கு. நீ கூப்பிட்ட உடனே அம்மா ஓடி வருவேன் போதுமா?
பாலா    : சரிம்மா...

காட்சி - 2
இடம்  -  மல்லிகா வீடு
மாந்தர் -   மல்லிகா,  மேனகா

மேனகா  : (வீட்டு வாசற்படியிலிருந்து) பாலாம்மா பாலாம்மா...
மல்லிகா : (உள்ளேயிருந்து) இதோ ... வர்றேன்...(அருகில் வந்து) என்னங்க...புதுப் புடவையும் அதுவுமா எங்கே கிளம்பிட்டீங்க...?
மேனகா  : கல்யாணம்ங்க...நெருங்கிய சொந்தக்காரங்க வீடு அவங்க திருவையாறு... ஆனா பொண்ணு வீடு இங்கே... (மண்டபம் சாப்பாடுன்னு எல்லா செலவும் போட்டு அவங்கதான் பண்ணி வைக்கிறாங்க...
மல்லிகா  : அப்படியா? புடவை நல்லாருக்கு. எங்கே எடுத்தீங்க...? திருச்சியிலா?
மேனகா   : இல்லே...நம்ம ஊர்லதான். அலங்கார மாளிகையில.
மல்லிகா  : பரவாயில்ல.... எந்த ஒரு கல்யாணம் காட்சி வந்தாலும் புதுப்புடவையிலதான் போறீங்க! எல்லாராலயும் அது முடியுமா? போன வாரம்கூட  பார்த்தேன். மினுமினுன்னு புதுப்புடவையில ஆட்டோவில ஏறிப் போறதை...?
மேனகா  : அதுவும் ஒரு கல்யாணம்தாங்க... தஞ்சாவூர் போனேன்...
மல்லிகா : பரவாயில்லைங்க... உங்க வீட்டுக்காரர் செலவுக்கு தாராளமா பணம் கொடுக்கறாரே...
மேனகா : அட நீங்க போங்க... எங்கே அவர் தர்றார்? போன வாரமும் கடன்தான்... இந்தப் புடவையும் கடன்லதான் வாங்கினேன். கடைக்காரர் என்னை நம்பித்தருவார்?
மல்லிகா : அப்படியா... சரி மேனகா! மாசாமாசம் சேவிங்ஸ்னு எதுவும் வச்சுக்க மாட்டீங்களா?
மேனகா : úஸவிங்ஸா? சே... சே ஆரம்பத்துல வச்சுப் பார்த்தேன். ஆனா ஏதாவது ஒரு செலவு வந்துடுது. அவருக்கு, எனக்கு அல்லது  பையனுக்கு!... சேவிங்ஸ்லாம் வேண்டாம் சாமின்னு விட்டுட்டேன். அவரு மாசம் முப்பதாயிரம் தந்திடறார். அதுல அரிசி பருப்பு மளிகை சாமான்னு மொத்தமா வாங்கி போட்டுடறேன். காஸ் சிலிண்டர்,  பால் செலவு வேலைக்காரி சம்பளம் லொட்டு லொசுக்குன்னு போனாலுமே மீதி  இருக்கும். அதை சேவிங்ஸ் பண்றது, எண்ணிப் பார்க்கிற வேலையெல்லாம் என்கிட்டக் கெடையாது. டக்னு புதுசா ஒரு புடவையைத் வாங்கிட்டு வந்துருவேன். எத்தனை ஃபங்ஷன் வந்தாலும் புதுப்புடவையோடதான் அட்டென்ட் பண்ணுவேன்.
மல்லிகா : பரவால்ல. ஜாலியா இருக்கீங்க. 
ஜம்னு கல்யாணத்துக்கு போயிட்டு வாங்க...

காட்சி- 3
இடம் : மேனகா வீடு,  மாந்தர்  -   மேனகா,  சிலிண்டர் பாய் 
(சிலிண்டர் பாய் காலிங் பெல்லை

அழுத்துகிறான். மேனகா வெளியே வருகிறாள்.)
மேனகா :  (அதிர்ச்சியுடன்) என்னப்பா...? சிலிண்டரா...? 
சிலிண்டர் பாய் : ஏம்மா... நீங்கதானே புக் பண்ணீங்க...?
மேனகா : ஆமா... ஆனா இன்னும் ரெண்டு நாளாகும்னு நெனச்சேன். அப்ப சம்பளம் வந்திடும்... இப்படி திடீர்னு வந்து நிக்கிறியேப்பா...
சிலிண்டர் பாய் : என்னமா நீங்க... ஏன் முன்னாடியே புக் பண்ணீங்க... ரென்டு நாள் கழிச்சு பண்ணியிருக்க வேண்டியதுதானே...?
மேனகா : இப்ப கையில பணம் இல்லையேப்பா... ஒன்னாம் தேதி வர்றியா...?
சிலிண்டர் பாய் : இங்கே பாருங்கம்மா.. அஞ்சு கிலோ மீட்டர் தாண்டிதான் சிலிண்டர் குடோன் இருக்கு. அங்கேருந்துதான் வண்டியிலே கொண்டு வர்றோம். வீட்டுக்கு வந்த சிலிண்டரை வேண்டாம்னா திரும்பிக் கொண்டு வர ஒரு வாரம் ஆகும். 
பரவாயில்லையா?
சினேகா : (அலறல் ஒலியுடன்) அய்யய்யோ... கேஸ் தீரப் போறது. ஒரு வாரம்னா சமைக்க என்ன பண்ணுவேன்?
சிலிண்டர் பாய்: அக்கம் பக்கத்துல யார்கிட்டயாவது கடன் வாங்கும்மா...அய்யாவுக்கு சம்பளம் வந்ததும் திருப்பிக் கொடுத்துடுங்க...
சினேகா     : அதெல்லாம் சரி. ஆனா மாசக் டைசி. யார்கிட்ட வாங்குறது. சரி ரெண்டு நிமிசம் பொறு. இரு வர்றேன்.

காட்சி- 4
(இடம் : மல்லிகா வீடு)
மாந்தர்:  1. மல்லிகா,  மேனகா (மல்லிகாவின் தோழி), பாலா.

மேனகா    : பாலாம்மா... பாலாம்மா...!
மல்லிகா   : (வெளியே வந்து) என்னங்க...?
மேனகா   : பாலாம்மா. ஒரு ஹெல்ப் அவசரமா ஒரு ஆயிரம் ரூபா கடன் வேணும்மா...இன்னும் ரெண்டு நாள்ல சம்பளம் வந்ததும் மொத வேலையா திருப்பி தந்துடறேன்... சிலிண்டர் வந்திருக்கு பாலாம்மா...
மல்லிகா   : (அதிர்ச்சியுடன்) என்ன ஆயிரம் ரூபாயா? மாசக் கடைசியில அவ்வளவு என்கிட்ட  இருக்காதே...
மேனகா   : பாலாம்மா... ப்ளீஸ்மா... சிலிண்டர்
காரன் போக மாட்டேங்கிறான்.
மல்லிகா  : அதெல்லாம் சரி ஆனா அவ்வளவு பணம் என்கிட்ட இல்லையே.
மேனகா  : அப்படி நீங்க சொல்லக்கூடாது பாலாம்மா. எனக்கு ஹெல்ப் பண்ண தெருவுல வேற யாரு இருக்கா. நீங்க ஹவுஸ் ஓனர். உங்ககிட்ட கேக்காம வேற யாருக்கிட்ட  போய் நிப்பேன்.?
மல்லிகா : மேனகா! பணம் இல்லைனா நான் என்ன செய்ய முடியும். பக்கத்து வீடுகள்ல போயி என்னை கடன் வாங்கச் சொல்றீங்களா? அம்பது நூறுன்னா உடனே தருவேன். முழுசா ஆயிரம்ல கேக்குறீங்க?
(அப்போது பாலா அங்கு வருதல்)
பாலா : அம்மா!
மல்லிகா : பாலா போய்ப் படி. நாளைக்கு எக்ஸாம் இருக்குல்ல. இங்கே என்ன வேடிக்கை?
பாலா   : இல்லேம்மா? சத்தம் கேட்டுச்சி. ஆண்ட்டிக்கு என்னம்மா பிரச்சனை?
மேனகா  : பாலா! அம்மா சொல்றாங்க இல்லே. நீ போய்ப் படி. இது வேற பிரச்னை ஒன்னால முடியாது.
பாலா   : அம்மா. ப்ளீஸ் ... என்னம்மா பிரச்னை? எனக்கும் சொல்லும்மா.
மல்லிகா : அந்த ஆண்ட்டிக்கு இப்ப உடனே ஆயிரம் ரூபா வேணுமாம்;. சிலிண்டருக்கு கொடுக்க அவ்வளவு பணம் என்கிட்டே இல்லே. அதுதான் சொல்லிக்கிட்டிருக்கேனே.  நீ போய்ப் படி.
பாலா : அம்மா! என்னோட உண்டியல்ல இருக்குமேம்மா... அதுதான். பில்அப் ஆயிடுச்சே. அதை ஒடச்சி கொடுப்பமேம்மா.
மேனகா : பாலா உண்டியல் சேர்க்கறானா? பரவாயில்லையே.எங்க பாலாம்மா நான் இருபது ரூபா சேர்த்தே தந்திடறேன். என்றைக்கு இருந்தாலும் உண்டியலை ஒடைக்கத்தான் போறீங்க. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க பாலாம்மா...
மல்லிகா: சரி சரி! பாலா... அந்த உண்டியலை கொண்டா.
(மல்லிகா உண்டியலின் ஓட்டையைப் பெரிதாக்கி நாணயங்களைக் கீழே கொட்டி எண்ணுகிறாள்.)
மல்லிகா : பரவாயில்லே. நான் எதிர்பார்க்கவேயில்லை. ஆயிரம் ரூபாய்க்கு மேல கூட நூத்தி  சொச்சமும் இருக்கு. இந்தாங்க ஆயிரம் ரூபா.
மேனகா : இக்கட்டான இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன் பாலாம்மா. தேங்க்ஸ் பாலாம்மா...
மல்லிகா : அந்த தேங்க்ûஸ பாலாவுக்கு சொல்லுங்க. அவனுக்கு அவங்க அப்பா விளையாட்டு சாமான், பிஸ்கட்னு வாங்க அப்பப்ப பணம் கொடுப்பார். பாக்கெட்ல சேர்ற சில்லறையையும் அவன்கிட்டதான் கொடுப்பார். அவனும் அவ்வளவு ஆர்வமா காசு சேர்த்து புது சைக்கிள் வாங்கப்போறானாம். ஏண்டா செல்லம். அப்படித்தானே.
பாலா   : ஆமாம்மா... நேத்து நீ வாங்கித் தந்த
உண்டியல்லே காயின்ஸ் போட ஆரம்பிச்சுட்டேன் தெரியுமா? ஆண்ட்டி! நீங்களும் உண்டியல்லே காசு சேருங்க....இந்த மாதிரி சமயத்துக்கு அது உதவும்.
மேனகா : பாலா. இன்னைக்கே அதை ஆரம்பிக்றேனே. நீ எனக்கு நல்லாவே பாடம் புகட்டிட்டடா.
பாலாம்மா : ஆண்ட்டி உண்டியல் வாங்க கடைத்தெருவுக்கு அலையாதீங்க. புதுசா நான் தாறேன். எங்கம்மா எனக்கு ரெண்டு வாங்கித் தந்திருக்காங்க. ஒண்ணு நான் யூஸ் பண்றேன். அடுத்ததை யூஸ் பண்ண மூணு மாசமாகும். அப்ப நீங்க வாங்கித் தந்தா போதும். சரியா ஆண்ட்டி!
மேனகா  : என்ன புள்ளை சின்ன வயசுலேயே இப்படிப் பேசறானே. பெரியவங்களுக்கு எல்லாம் சொல்லிக் கொடுக்கிறானே. ஒரு அர்ஜென்ட்ல இப்படி அவனா வந்து ஹெல்ப் பண்றானே.... நீ என்னை திருத்திட்டடா ராஜா. எனக்கு  நீ வழிகாட்டிடா செல்லம்.  
மல்லிகா : சரி மேனகா. சிலிண்டருக்கு 800 ரூபா போதும். ஏன் ஆயிரம் ரூபா?
மேனகா  : பால், மளிகை சாமான் வாங்க கையில அவசர செலவுக்கு சுத்தமா பணம்  இல்லங்க. எல்லாமே தீர்ந்து போச்சு. அவருகிட்ட கேட்டா கோபப்படுவாரு.  அதுதான் கூட  இருநூறு ரூபா.
மல்லிகா : சரி சரி சிலிண்டர் காரன் போயிடப் போறான். பாலா, போடா.!... ஆன்ட்டிக்கு பணம் கொண்டுவா!....

திரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com