வாரியாரின் பொன்மொழிகள்!
By DIN | Published On : 27th April 2019 10:51 AM | Last Updated : 27th April 2019 10:51 AM | அ+அ அ- |

மாசிலா மனமே ஈசன் கோயில்
அதிர்ச்சியில்லத முயற்சி உயர்ச்சி தரும்
வேலை உடையவனிடத்தில் வேலை கேள்
இரை தேடுவதோடு இறையையும் தேடு
முதுமைக்கு வேண்டின் இளமையில் தேடு
மறுமைக்கு வேண்டின் இம்மையில் தேடு
உணவு தேடுவதோடு உணர்வும் தேடு
செல்வம் அடக்கத்தால் நிலை பெறுகின்றது
உள்ளம் வசமானால் உலகம் வசப்படும்
தூய உணவை உண்டால் தூய குணம் வளரும்
யானையைப் போல் குளிப்பாயாக....
தேனியைப்போல் உழைப்பாயாக
- சஜ்ஜா பிரபு மாறச்சன்