எறும்பினமே!

எறும்பினமே!

 எறும்பினமே! எறும்பினமே! எங்கே போறீங்க? எங்களுக்கு வழி காட்ட இங்கே வாருங்க!

 எறும்பினமே! எறும்பினமே! எங்கே போறீங்க?
 எங்களுக்கு வழி காட்ட இங்கே வாருங்க!
 ஒருவர் பின் ஒருவராக எங்கே போறீங்க?
 ஒற்றுமையைக் கற்றுத் தர இங்கே வாருங்க!
 
 போட்டியின்றிப் பொறுமையுடன் எங்கே போறீங்க?
 பொறுமையைக் கற்றுத் தர இங்கே வாருங்க!
 சோம்பலின்றிச் சோர்வின்றி எங்கே போறீங்க?
 சுறுசுறுப்பைக் கற்றுத் தர இங்கே வாருங்க!
 
 ஊர்ந்து, உர்ந்து உணவைத் தேடி எங்கே போறீங்க?
 உண்ணும் உணவைப் பகிர்ந்து உண்ண கற்றுத் தாருங்க!
 மேடு பள்ளம் கடந்து நீங்க எங்கே போறீங்க?
 மேலான எண்ணங்களைக் கற்றுத் தாருங்க!
 
 அச்சமின்றி அமைதியாக எங்கே போறீங்க?
 அடக்கத்தைக் கற்றுத் தர இங்கே வாருங்க!
 கூச்சலின்றிக் குழப்பமின்றி எங்கே போறீங்க?
 கூட்டத்துக்குத் தலைமை தாங்க இங்கே வாருங்க!
 
 தொலைபேசி, தொலைக்காட்சி எதுவும் இல்லாமல்
 நீங்கள் தொடர்பு கொள்ளும் முறையைக் கொஞ்சம்
 கற்றுத் தாருங்க!
 நான்கு வழி எட்டு வழி சாலையில்லாமல்
 நீங்கள் பயணம் செய்யும் முறையைக் கொஞ்சம்
 கற்றுத் தாருங்க!
 எஸ்.சரஸ்வதி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com