நினைவுச் சுடர் !: முக்கியமானவர்!

பதினாறாம் நூற்றாண்டு. பிரான்ஸில் ஒரு முக்கியமான அமைச்சர் இருந்தார். அவரது பெயர் "கார்டினல் ட்யூபாய்ஸ்.  அவர் ஒரு முறை ய்வாய்ப்பட்டிருந்தார், புகழ் பெற்ற மருத்துவர் "போடோன்' என்பவர் அவருக்கு வைத்தியம்
நினைவுச் சுடர் !: முக்கியமானவர்!

பதினாறாம் நூற்றாண்டு. பிரான்ஸில் ஒரு முக்கியமான அமைச்சர் இருந்தார். அவரது பெயர் "கார்டினல் ட்யூபாய்ஸ்.  அவர் ஒரு முறை ய்வாய்ப்பட்டிருந்தார், புகழ் பெற்ற மருத்துவர் "போடோன்' என்பவர் அவருக்கு வைத்தியம் செய்வதற்காக வந்திருந்தார். 

வைத்தியர் போடோனிடம் ட்யூபாய்ஸ், ""டாக்டர்!...., நீங்க மருத்துவமனையிலே கஷ்டப்படற ஏழை, எளிய மக்களுக்கு வைத்தியம் பார்க்கிறா மாதிரி முரட்டுத்தனமா எனக்கு வைத்தியம் பார்க்காதீங்க.... ஜாக்கிரதையா, அக்கறையா வைத்தியம் பாருங்க.... நான் எவ்வளவு முக்கியமானவன்னு உங்களுக்குத் தெரியுமில்லே....'' என்று சற்று ஆணவமாகச் சொன்னார்.

பண்பாடில்லாத இந்தப் பேச்சைக் கேட்டார் போடன்.

போடோன்,  ட்யூபாய்ûஸப் பார்த்து, ""அப்படிச் சொல்லாதீங்க!.... நீங்க இழிவாக நினைக்கிற அவங்க ஒவ்வொருத்தரையும் நான் உங்களை மாதிரி  ஒரு முக்கியமான அமைச்சராகத்தான் பார்க்கிறேன்!.... அதனாலே என் வைத்தியத்திலே எந்த வித்தியாசமும் இருக்காது!...'' என்றார். 

அமைச்சர் ட்யூபாய்ஸ் தன் தவற்றை உணர்ந்து வெட்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com