நினைவுச் சுடர்! பால் சாதமா? தயிர் சாதமா?

ஒரு சிறுவன் காளி கோயிலில் காளியை நோக்கித் தியானம் செய்து கொண்டிருந்தான். அவனது பெயர் ராமன். அவனது பக்தியைப் பாராட்டும் வகையில் அவன் முன்னால் பிரத்யக்ஷமானாள் அம்பிகை.
நினைவுச் சுடர்! பால் சாதமா? தயிர் சாதமா?

ஒரு சிறுவன் காளி கோயிலில் காளியை நோக்கித் தியானம் செய்து கொண்டிருந்தான். அவனது பெயர் ராமன். அவனது பக்தியைப் பாராட்டும் வகையில் அவன் முன்னால் பிரத்யக்ஷமானாள் அம்பிகை.
 "ராமா!...., உன்னுடைய மனப்பூர்வமான பக்தி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது!.... வாழ்க நீ!.... உனக்கு நான் அருளுடன் கூடிய பிரசாதத்தைத் தர முடிவு செய்து விட்டேன்!.... இதோ பார்!...'' ... என்று காளி கூறியவுடன் சிறுவன் ராமன் முன்பு இரு கிண்ணங்கள் தோன்றின! அவன் திகைத்தான்!
 காளி ராமனை நோக்கி, "இதோ பார்!.... இங்கு இரு கிண்ணங்கள் உள்ளன... அதில் இதோ இருக்கிறதே, இதில் பால் சாதம் உள்ளது! ..... இதோ!.... மற்றுமொரு கிண்ணம் இருக்கிறதல்லவா?.... அதில் தயிர் சாதம் இருக்கிறது!.... பால் சாதம் சாப்பிட்டால் நீ அறிவு மிகுந்தவனாக ஆவாய்!.... தயிர் சாதம் சாப்பிட்டால் நீ செல்வம் மிகுந்தவனாக ஆவாயா.... உனக்கு எது வேண்டுமோ அதைச் சாப்பிடுவாய்!.... உனக்கு எது வேண்டும்?.... பால் சாதமா?.... தயிர் சாதமா?.... என்று கேட்டுவிட்டு புன்னகைத்தபடி காட்சியளித்தாள் காளி!
 சிறுவன் ராமன் ஒரு நிமிடம் யோசித்தான். வாழ்க்கைக்கு செல்வம் இல்லாத அறிவு மட்டும் போதுமா?...... அறிவு இல்லாதவனிடம் இருக்கும் செல்வம் சரியா.... என்றெல்லாம் பலவாறாக சிந்தித்தான்!
 காளி அவனிடம், "என்ன யோசிக்கிறாய் ராமா?.... உனக்கு எது பிடிக்குமோ அதை உண்பாய்!'' என்றாள்.
 சிறுவன் ராமன், "இரண்டு கிண்ணங்களையும் ஒன்றாகச் சேர்த்து "கபகப' வென்று உண்டு விட்டான்!''
 காளிக்கு சிரிப்பும் சற்று கோபமும் ஏற்பட்டது! "என்ன இது? இப்படிச் செய்துவிட்டாயே,.... இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் சாப்பிடுவாய் என்றல்லவோ நினைத்தேன்!'' என்றாள்.
 "அம்மா!...அறிவிருந்தும் செல்வமின்றி உலகில் வாழ இயலுமா?...... பொருளிருந்தும் அறிவற்ற வாழ்க்கை சோபிக்குமா?... எனவேதான்!...''
 "அதற்காக?...''
 ".... அது மட்டுமல்ல...... நீ வரமாக அளித்த பிரசாதத்தில் ஒன்றை நான் எப்படி அலட்சியம் செய்ய முடியும்?... மேலும் இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் நான் சாப்பிட வேண்டும் என்று நீங்கள் எனக்குக் கட்டளை இடவில்லையே!... அது என் சிந்தனையை சோதிப்பதாகாதா!... எனது பதில் சரியா தாயே!...''
 காளிக்குச் சிரிப்பு வந்துவிட்டது!.... "நீ மிகச் சிறந்த அறிவாளியாக விளங்குவாய்!.... அந்த அறிவின் மூலமாக உனக்கு நிறைய செல்வமும் வந்து சேரும்!... உன்னால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காண இயலும்!.... நீண்ட நெடுங்காலப் புகழையும் அடைவாய்!... இது அறிவு, செல்வம் தவிர நான் உனக்களிக்கும் மூன்றாவது வரம்!'' என்றாள் அன்னை காளி!
 நீடித்த புகழையும், கூர்மையான அறிவையும், செல்வத்தையும் பெற்றுப் புகழடைந்தான் அந்தச் சிறுவன் ராமன்!... அவனே தெனாலி ராமன்!
 - தீபம் எஸ்.திருமலை
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com