பாராட்டுப் பாமாலை!  42: விருதுக்கு பெருமை

மனிதப் பிறவு புனிதமுற மங்கை பிறந்தாள் மதுரையிலேசின்னப்பிள்ளை அவர் பெயராம்
பாராட்டுப் பாமாலை!  42: விருதுக்கு பெருமை

மனிதப் பிறவு புனிதமுற 
மங்கை பிறந்தாள் மதுரையிலே
சின்னப்பிள்ளை அவர் பெயராம்
பிறந்து தன் செயலால் புகழ் சேர்த்தார்!

சிற்றூர் ஏழை பெண்களது
சீரிய வாழ்வு செழிப்புறவே
நற்றொண்டு நிறுவனம் களஞ்சியத்தை
நிறுவி அதனின் பொறுப்பேற்றார்.

மகளிர் குழுவை வழிநடத்தும்
மாபெரும் தலைவி இவரானார்
சுகமாய் பெண்கள் வாழ்வதற்கு
தனது பணியை அர்ப்பணித்தார்!

தகுதியான பெண்களுக்குத் 
தமிழக அரசின் உதவிகளைத்
தானே பெற்றுத் தந்திட்டார்
தொழில்கள் தொடங்கத் துணையானார்!

சிற்றூர் பெண்களைச் சேமிப்பில்
சாதனை படைக்கச் செய்திட்டார்!
நற்றிறம் மிக்க பெண்களது
நல்ல ஆளுமை இவரானார்!

மதுவெனும் அரக்கனை கண்ட இவர்
கொதித்து துணிந்து போரிட்டார்!
கந்து வட்டிக் கொடுமைக்குச்
சங்கு ஊத துணிந்திட்டார்!

வயதோ இவருக்கு அறுபத்தேழு
வாங்கி விருதுகள் ஏராளம்!
உயரிய பத்மஸ்ரீ விருதிற்கும்
உழைப்பால் பெருமை சேர்த்திட்டார்!

இருபது ஆண்டுகள் முன் இவர்க்கு
சக்தி புரஸ்கர் விருதளித்துப்
பிரதமர் வாஜ்பாய் இவருடைய
பாதம் தொட்டு ஆசிபெற்றார்!

பாரோர் போற்ற வாழ்கின்ற
பத்மஸ்ரீ சின்னப் பிள்ளைக்கு
பாராட்டுப் பாமாலை சூட்டிடுவோம்
பல்லாண்டு வாழ வாழ்த்திடுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com