நூல் புதிது! 

மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நாடக வடிவில் அமைத்துக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.
நூல் புதிது! 

முத்தாரம்
 ஆசிரியர் : சொ.செண்பகவல்லி
 பக்கம் - 70, விலை - ரூ 50/-
 மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நாடக வடிவில் அமைத்துக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். பயம் போயே போச்சு!..... யாவரும் கடவுளின் குழந்தைகளே!,.....காப்பி அடிக்கலாமா?,.... போன்ற தலைப்புகளில் 25 நாடகங்கள் உள்ளன. பள்ளிச் சிறுவர்கள் படிக்க வேண்டிய அருமையான நூல்! மற்றும் காந்தியின் வாழ்க்கையை முக்கிய பள்ளி நிகழ்ச்சியில் நடித்துக் காட்டவும் உதவும் நூல்! வெளியிட்டோர் : காந்தி அமைதி நிறுவனம், 332, அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, செல்பேசி - 8939215045.
 
 பிங்குவின் கதை!
 ஆசிரியர் - சூ.குழந்தைசாமி
 பக்கம் - 192, விலை -
 கதைகளில் வரும் குட்டி என்கிற கதாபாத்திரம்தான் படு சுட்டி! இந்தத் தொகுப்பு வெறும் கதைபோல அல்லாமல் கதைகளின் முடிவில் பல கேள்விகள் எழுப்பட்டு கதைகளிலிருந்து விடைகளைப் பெற முயற்சிக்கும் பாணியில் எழுதப்பட்டிருக்கிறது. சமுதாயத்தில் அன்பு, நேர்மை, சமூக ஒற்றுமை, மனித சக்தி போன்றவற்றை கதைகளில் அலசி கேள்விக் கணைகளைத் தொடுத்து நல்ல சமுதாயம் சாத்தியமே என்பதை நிரூபிக்கிறார் ஆசிரியர். கதைகளுக்குப் பிறகு மனப்பயிற்சியைத் தூண்டுகிறார் ஆசிரியர். பல்வேறு தலைப்புகளில் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவையாவும் காந்தியின் கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் பறை சாற்றுகின்றன. வெளியிட்டோர் - கதிர் வெளியீடு, 7, பொன்னம்பலம் தெரு, சோழபுரம், அம்பத்தூர், சென்னை - 600053. செல்பேசி - 9884483044
 
 சபாஷ் பூக்குட்டி, ஆசிரியர் - உஷாதீபன்
 பக்கம் - 128, விலை - 110/-
 "அடி சக்கே'.... "அனுபவக் கல்வி'....."சபாஷ் பூக்குட்டி'..."பிஞ்சு மனசு' போன்ற தலைப்புகளில் எட்டு கதைகள் உள்ளன. உதாரணமாக, "பிஞ்சு மனசு' கதை யாரையும் வசீகரிக்கும்....காது கேட்காத தாத்தா சத்தமாக பாட்டைக் கேட்டுக்கொண்டிருக்க, படிக்கும் சிறுவனுக்கு அது தொந்தரவாக, அதைத் தட்டிக்கேட்க மனமின்றி திரும்பி வந்து விடுகிறான் சிறுவன்! அதைத் தவிர ஒன்பது சிறுவர்களுக்கான நாடகங்களும் உள்ளன. மிக அருமையான தொகுப்பு! சிறுவர்களுக்கு ஏற்ற கதைகளும், நாடகங்களும்! வெளியிட்டோர் - நிவேதிதா பதிப்பகம், 10/3, வெங்கடேஷ் நகர் மெயின் ரோடு, விருகம்பாக்கம், சென்னை - 600092. செல்பேசி - 8939387296.
 
 தங்கச்சிப் பாப்பா
 ஆசிரியர் - சுகுமாரன்
 பக்கம் - 56, விலை - 125
 சிறுவர்களுக்கான 70 பாடல்களைக் கொண்ட தொகுப்பு! ஒவியர் பிள்ளையின் வசீகரமான ஓவியங்களுடன் புத்தகம் பளீரென்று இருக்கிறது! "அப்பா மூக்கு எங்கே?' என்ற பாட்டில், அம்மாவையும், அப்பாவையும் கயல் வரைந்தாள். அதில் அப்பாவின் மூக்கு பெருத்த மீசையால் மறைந்து விடுகிறது! "நூல் பந்து எங்கே?' என்ற பாட்டில் உருண்ட நூல்கண்டு நூலாய்ப் பிரிந்ததைப் உற்றுப் பார்க்கும் பூனை! "பயணப் படிப்பு' கவிதை மிக எளிமையாய் ஊர் சுற்றி உலகத்தைப் பார்க்கச் சொல்கிறது! அருமையான புத்தகம்! வெளியிட்டோர் - கிறிஷ் கயல், 62, சாந்தி நாத் தெரு, ஸ்ரீசக்ரா நகர், மாங்காடு, சென்னை - 600122, செல்பேசி - 91 9176594635.
 
 சிங்கராஜாவும் செவிட்டு எருமையும்!
 ஆசிரியர் - வசீகரன்
 பக்கம் - 64, விலை - ரூ 50/-
 கண்களைத் திறந்த எறும்பு,.... பொறாமைக்கு வாழ்வில்லை!,.....சிங்கராஜாவும் செவிட்டு எருமையும்,.... போன்ற 17 கதைகள் அடங்கிய புத்தகம்! அத்தனையும் சிறுவர், சிறுமியர் படித்துச் சுவைக்கும்படி இருக்கிறது! இளவரசனுக்கு புத்தி புகட்டிய எறும்பு,சாய்வான பாதையை அமைத்துத் தன் யானை தன் குட்டியைக் காப்பாற்றிய யானையின் கதை வெகு ஜோர்! வெளியிட்டோர் - மின்னல் கலைக்கூடம், 117 எல்டாம்ஸ் சாலை, சென்னை - 600018, செல்பேசி 9841436213
 
 உண்மை தந்த பரிசு
 ஆசிரியர் - முனைவர் இடைமருதூர் கி.மஞ்சுளா
 பக்கம் - 240, விலை - 175/-
 இந்நூல் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவரும் நூலாகும். சிறுவர்களுக்கு ஏற்ற அருமையான படைப்புகள். சுண்டெலியும் சுந்தரியும்,.... நண்பனின் குரல்,.... சுழற்சி,... உள்ளினும் உள்ளம் சுடும்.... போன்ற சிறப்பான 30 கதைகளின் தொகுப்பு! சிறுவர் சிறுமியருக்கு நல்ல வழிகாட்டி நூல்! வெளியிட்டோர் - மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு பாரிமுனை, சென்னை - 600108, தொலைபேசி - 044 24357832.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com