பாராட்டுப் பாமாலை!  44: மனிதநேய மாமணி சுபாஷினி வாழி!

கொல்கத்தா நகரின் அருகிலுள்ளவல்ல கிராமம் ஹன்ஸி புக்காரில்மாமணி போல் ஒரு பெண்மணி பிறந்தார்
பாராட்டுப் பாமாலை!  44: மனிதநேய மாமணி சுபாஷினி வாழி!

கொல்கத்தா நகரின் அருகிலுள்ள
வல்ல கிராமம் ஹன்ஸி புக்காரில்
மாமணி போல் ஒரு பெண்மணி பிறந்தார்
சுபாஷிணி என்பதவர் பெயராம்!

பெரும் நோய் நீக்க பணமது இன்றி!
இளமையிலேயே  இழந்தார் கணவரை
குறைந்த செலவில் நோயினை அகற்ற - ஒரு 
மருத்துவ மனை அமைக்க இலட்சியம் கொண்டார்!

என்னே லட்சியம்! வறுமையில் செம்மை!
நான்கு பிள்ளை களில்  இரண்டை 
அநாதை இல்லம் தனில் சேர்த்தார்!
தெரு ஓரத்தில் காய்கறி  விற்றார்! 
 
கிடைத்த பணத்தைச் சேமித்தார்...
ஊரார்அவருக்கு உதவியும் செய்தனர்!- அதில்
இனிதே மருத்துவமனை அமைத்தார்- அதன்
பெயர் "மனித நேய மருத்துவ மனை' யாம்!

பிள்ளை ஒருவனை படிக்கவைத்தார் - அவன் 
மருத்துவராகிச் சேவை செய்கிறான்!
நாற்பது ஆண்டு உழைப்பின் பலனாய்!
ஊர்புறத்தில் நோய்க ளகற்றினார்! 

பன்னிரெண்டு மருத்துவர் இப்போது!
பணியைச் சிறப்பாய்ச் செய்கின்றார்!
பதிவுக் கட்டணம் பத்தே ரூபாய்!
குறைந்த கட்டணம்! சிறந்த சிகிச்சை!

அம்மை சுபாஷிணியை  போற்றி பாரதம் 
"பத்மஸ்ரீ' விருதை அளித்து மகிழ்ந்தது!
அன்னையின் லட்சியம் நிறைவேறியது!
அவரது செயலைப் போற்றி வாழ்த்துவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com