பொன் மொழிகள்

நம்பிக்கை கடவுளையும் அசைக்கும்பயம் பலசாலியையும் செயலிழக்க வைக்கும்
பொன் மொழிகள்

நம்பிக்கை கடவுளையும் அசைக்கும்பயம் பலசாலியையும் செயலிழக்க வைக்கும்

-ஜோயன் ஆஸ்டின்

சோம்பல் எல்லா விஷயங்களையும் கஷ்டமாக்கும்.
சுறுசுறுப்பு எல்லாவற்றையும் எளிதாக்கும்

-ஃபிராங்க்ளின்

நற்பண்பு இல்லாதவனின் அறிவு ஆபத்தானது;
அறிவில்லாதவனின் நற்பண்பு பயனற்றது

-நேருஜி

சக மனிதருக்கு உதவுவது ஆண்டவனுக்கு உதவுவதாகும். எனவே எல்லா சமயத்தினரும் சக மனிதருக்கு உதவ வேண்டும். பிரார்த்தனை செய்யுங்கள்- கடவுளுக்கு அருகே நீங்கள் செல்லலாம். ஆனால் சேவை செய்து பாருங்கள்- கடவுள் உங்கள் அருகில் வருவார்

-அன்னை தெரசா

கோபப்படும் மனிதனால் அதிக அளவு சிறப்பாக வேலைகள் செய்ய முடியாது. அமைதியான மன்னிக்கக்கூடிய சமநோக்குடைய நிலை குலையாத மனமுடையவனே அதிக அளவு செயல்பட முடியும்

-சுவாமி விவேகானந்தர்

ஒரு முறை வந்தால் கனவு 
இரு முறை வந்தால் ஆசை
பல முறை வந்தால் லட்சியம்

-டாக்டர் அப்துல் கலாம்

வாழ்க்கை என்பது அவரவர் வாழ்வதற்கு என்று மட்டும் எனக் கருதக்கூடாது
மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்

-தந்தை பெரியார்

பேச்சு பெரியதே...ஆனால் மெளனத்தின் மொழி அதைவிடப் பெரியது

-வாரியார்

சகிப்புத்தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண்தான். பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது. பெருக்கத்தான் முடியும்

-காந்திஜி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com