அங்கிள் ஆன்டெனா

குளிர்காலத்தில் நாமே வெடுவெடுவென்று நடுங்குகின்றோமே, மென்மையான உடலைக் கொண்ட இந்தப் பறவைகள் எப்படிக் கடுங்குளிரைத் தாங்கிக் கொள்கின்றன?
அங்கிள் ஆன்டெனா

கேள்வி: குளிர்காலத்தில் நாமே வெடுவெடுவென்று நடுங்குகின்றோமே, மென்மையான உடலைக் கொண்ட இந்தப் பறவைகள் எப்படிக் கடுங்குளிரைத் தாங்கிக் கொள்கின்றன?
 பதில்: கடுங்குளிரிலிருந்து தப்பிக்க பறவைகள் பலவகையான டெக்னிக்குகளை வைத்திருக்கின்றன. இயற்கையும் அவற்றுக்குப் பல வகையில் உதவி செய்கின்றது.குளிர் காலம் வருவதற்கு முன்பே பறவைகளுக்கு நிறைய புதிய சிறகுகள் முளைக்கும். இந்த அதிகப்படியான சிறகுகள் குளிரைத் தாங்கக்கூடிய சக்தியை அவற்றுக்கு அளிக்கும்.
 மேலும், இந்தச் சிறகுகளுக்கு இடையில் காற்றுப் பைகள் போல உண்டாக்கிக் கொள்கின்றன பறவைகள். இந்த காற்றுப்பைகள் இளஞ்சூட்டைத் தருவதால் குளிர் பாதிக்காது.
 மேலும் குளிர்காலத்துக்கு முன்பு, கொழுப்புச் சத்து நிறைந்த உணவை அதிகாமாக பறவைகள் எடுத்துக் கொள்கின்றன. இந்தக் கொழுப்பும் குளிர்காலத்தில் அவற்றுக்கு வெப்பத்தைத் தந்து பாதுகாக்கிறது.
 மேலும் பறவைகள் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து அமர்ந்து கொள்ளும் இதனால் ஒட்டுமொத்தமாக வெப்பம் உண்டாகி அதுவும் ஒரு கேடயமாக பயன்படுகின்றது.
 இறுதியாக என்னதான் இருந்தாலும் குளிர்காலத்திலும் சூரியன் அவ்வப்போது வெளியே வருவார் இல்லையா? அப்போது பறவைகள் "சன்பாத்' (சூரியக் குளியல்) எடுத்துக் கொள்ளும்.
 -ரொசிட்டா
 அடுத்த வாரக் கேள்வி
 தெருவில் மின்சாரக் கம்பிகளில் ஹாயாக அமர்ந்திருக்கும் காக்கை குருவிகளுக்கு ஷாக் அடிக்காதா? ஏன்?
 பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம்
 நல்ல பதில் கிடைக்கும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com