அகில்குட்டியின் டைரி!: அன்ன பூரணி!

நவராத்திரிக்கு என்னோட  தோழிகளைக் கூப்பிட்டிருந்தேன்! எல்லோரும் வந்தாங்க.... அம்மா வாசலில் அழகாகக் கோலம் போட்டு அதற்குக் காவி பார்டரும் போட்டிருந்தாங்க....
 அகில்குட்டியின் டைரி!: அன்ன பூரணி!

நவராத்திரிக்கு என்னோட  தோழிகளைக் கூப்பிட்டிருந்தேன்! எல்லோரும் வந்தாங்க.... அம்மா வாசலில் அழகாகக் கோலம் போட்டு அதற்குக் காவி பார்டரும் போட்டிருந்தாங்க.... என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லோரும் கோலத்தை ரொம்பப் பாராட்டினாங்க.... அம்மாவுக்குப் பெருமையா  இருந்தது. வீட்டில் கொலு அமர்க்களமாக வைத்திருந்தோம்....  பறவைகள், மிருகங்கள், செட்டியார், பொம்மை செட், தேசத் தலைவர்கள், தெய்வங்களின் பொம்மைகள் எல்லாம் அற்புதமாக அடுக்கி வைத்திருந்தோம்! அதில் காந்தி சிலைக்குக் கீழே எழுதியிருந்த "வாய்மேயே வெல்லும்' ங்கிற வாக்கியம் மாலாவை நினைக்கத் தூண்டியது! ராமு சித்தப்பா நல்ல ஹெல்ப் பண்ணினார். ஜானகி சித்தியும்தான்! நானும் ரகுவும், பொம்மைகளை எடுத்துக் கொடுத்தோம்! சித்தப்பா அடுக்கினார். அம்மா அவல் கேசரியும், மொச்சைக் கொட்டை சுண்டலும் பண்ணியிருந்தாங்க.... 

வாணியும் லக்ஷ்மியும் நல்லாப் பாடுவாங்க.... அவங்க ரெண்டு பேரும் துர்கை, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய மூன்று தெய்வங்களைப்  பற்றி நல்லாப் பாடினாங்க.... அவங்க குரல் ரொம்ப இனிமையா இருந்தது! அதிலும் ""வாணியே உன் பாத மலர்கள் வணங்கித் துதித்துப் பாடுவோம்!'' ங்கிற பாட்டு ரொம்ப அருமையா இருந்தது. நான் எல்லோருக்கும் வெற்றிலைப் பாக்கு, பழம், வளையல், ஒரு குட்டி முத்து மாலை, சீப்பு,பென்சில், ரப்பர்,  பேனா,  போன்றவை அடங்கிய பையைக் கொடுத்தேன். எல்லோருக்கும் சந்தோஷமா இருந்தது.

எப்பவுமே இந்த நவராத்திரிக் கொண்டாட்டம் வீட்டில் அமர்க்களமாக இருக்கும். இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது! திடீரென்று அம்மாவின் கோவில் தோழிகள் வருவதாக அம்மாவுக்குப் போன் செய்தார்கள்! அம்மாவும் வரச் சொல்லிவிட்டாள். ஆனால் வீட்டில் சுண்டலும், கேசரியும்  காலியாகி விட்டது! வர்றவங்களுக்கு சாப்பிட என்ன தருவது என்று அம்மா கவலைப் பட்டாங்க.... சிறிது நேரம் ஆனவுடன் பத்து பேர் வந்துட்டாங்க... எல்லோரும் சேர்ந்து துதிப்பாடல்களைப் பாடினார்கள். மிகவும் ரம்மியமான குரல்கள்! அந்த இடத்திலே மனசு பக்தியாலே நெகிழ்ந்து விட்டது! 

அம்மாவின் தோழி சித்ரா ரொம்ப நல்லாப் பாடினாங்க! திடீரென்று சித்ரா ஆன்ட்டி என்னைப் பார்த்து, ""நீ ஒரு பாட்டுப் பாடேன்'' அப்படீன்னாங்க.... 

எனக்கு டக்கென்று எதுவும் பாட வரலே.... தெரிந்த ஒரு ஸ்லோகத்தைப் பாடினேன். அந்த ஸ்லோகம், ""அன்ன பூர்ணே, .... சதா பூர்ணே, .... '' என்று தொடங்கும் ஸ்லோகம் அது! எல்லோரும் கை தட்டினாங்க!... எனக்கு வெட்கமா ஆயிடுச்சு! வாசல் கேட் சத்தம் கேட்டது! சித்தப்பாதான்!

அவர் கையில் ஒரு பையுடன் வந்தார். அதில்,  முறுக்கும், அல்வாவும் இருந்தது! அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்! பின்னே? .... ஃபிரெண்ட்ஸூக்கு என்ன தருவதுன்னு முழிச்சிக்கிட்டு இருந்தாங்களே.... வீட்டில் வெறும் வாழைப்பழங்கள்தான் இருந்தது!

அம்மா எல்லோருக்கும் ஒரு முறுக்கும் கொஞ்சம் அல்வாவும் தந்தாங்க.... எல்லோரும் ரொம்ப ருசியா இருந்ததுன்னு சொன்னாங்க... வெற்றிலை பாக்கு வாங்கிக்கொண்டு எல்லோரும் விடை பெற்றுக்கிட்டாங்க....

""ராமு, நீங்க நல்ல வேளையா சமயத்துக்கு வந்தீங்க.... அவங்களுக்கு என்ன கொடுக்கறதுன்னு முழிச்சுக்கிட்டிருந்தேன்!.... அந்த அன்ன பூரணிதான் காப்பாத்தினா!... அகில் வேறே இன்னிக்கு அதுக்குப் பொருத்தமா அன்ன பூர்ணே பாட்டுப் பாடினாள்!'' அப்படீன்னாங்க....

""அம்மா, எனக்கு அல்வா?...'' ன்னு கேட்டேன். ""இந்தா!...'' ன்னு பேக் செய்திருந்த டப்பாவோட கொடுத்தாங்க... அதில் "அன்ன பூர்ணா ஸ்வீட்ஸ்' என்று எழுதியிருந்தது! எனக்கு ஆச்சரியமா இருந்தது! பூஜை அறைக்குச் சென்றுஅன்னபூரணி படத்தை நெகிழ்ச்சியோடு பார்த்தேன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com