எறும்புகளின் அரசாங்கம்

பாதை ஓரம் ஓரிடத்தில் சிவப்புக் கட்டெறும்புகள் சாரை, சாரையாகப் போய்க்கொண்டிருந்தன. அமுதன் அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தான்
எறும்புகளின் அரசாங்கம்

பாதை ஓரம் ஓரிடத்தில் சிவப்புக் கட்டெறும்புகள் சாரை, சாரையாகப் போய்க்கொண்டிருந்தன. அமுதன் அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தான்

...."என்னே ஒரு ஒழுங்கு!..... ஒவ்வொன்றும் ஏதோ தானியங்களை எடுத்துக் கொண்டு நேராகப் போகின்றனவே?.... வியப்பாய் இருக்கிறதே!....' என்று நினைத்த படியே ஓர் எறும்பை எடுத்து உள்ளங்கையில் வைத்தான்!

""என்ன அண்ணே!.... என்னைப் பார்த்துட்டீங்களா?.... இப்படிப் பிடிச்சுக் கையிலே எடுத்துக்கிட்டீங்களே!.... நான்  போக வேண்டாமா?...'' என்றது அமுதன் கையில் இருந்த எறும்பு!

""இதோ!.... உன்னை அனுப்பிடறேன்!.... பயப்படாதே!.... எறும்புத் தம்பி!... உன்கிட்டே பேசணும்னு ஆசைப்பட்டேன்!.... அதுக்காகத்தான் எடுத்தேன்!.... '' என்றான் அமுதன்.

""அண்ணே, நாங்கள் ஒற்றுûமாக, ஒழுக்கத்துடன், நேர்மையாக வாழ்பவர்கள்...... பூமிக்குள்ளே எங்கள் கூடு என்பது ஒரு ஊர் போல, அரண்மனை போல அமைக்கப்பட்டிருக்கும்! ராணி எறும்பின் கீழ் முறையாகச் செயல்படுவோம்! எங்க கிட்டே படைப்பிரிவு, உழைப்பவர் பிரிவு, பிறகு பெண்களுக்கு என தனித்தனி இடங்கள் எங்கள் மாளிகையில் உள்ளன! ''

""அது சரி, தானியங்ளை வரிசையாக எடுத்துப் போகிறீர்களே.... எங்கே வைப்பீர்கள்?''

""தானிய சேகரிப்பு அறையில்!''

""அதெப்படி?... மண் பகுதியில்தானே வைக்கிறீங்க?..... மழை பெய்து ஈரப்பதம் வந்தா தானியங்கள் முளைச்சுடாதா?....''

""நெல் முதல் எல்லா தானியங்களையும், முளை விடும் பகுதியை கடித்து எடுத்துவிட்டுத்தான் சேகரிப்போம்!''

""அடேடே!.... இவ்வளவு அறிவு உங்களுக்கு எப்படி வந்தது? யார் தந்தது?...''

""இயற்கைத் தாய்!.... அப்புறம் இன்னொரு விஷயம்!... நாங்க விவசாயமும் செய்யறோம்!.... அது தெரியுமா உங்களுக்கு?.... ''

""இதென்ன புது விஷயமா இருக்கே!.... ரொம்ப ஆச்சரியமாவும் இருக்கு!''

""ஒரு வகைப் புல்லை எங்க புற்றுக்குள்ளேயே விளைய வைக்கிறோம்!.... அதுவும் எங்களுக்கு உணவாகும்!.... '' 

""அடேங்கப்பா!.... விவசாயம் கூடச் செய்யறீங்கன்னு கேக்கறப்போ ரொம்பத்தான் ஆச்சரியமா இருக்கு!''

""அது மட்டுமில்லே!.... இன்னொரு சமாச்சாரமும் இருக்கு!''

""அதென்னது அது?.... ;சொல்லேன்!.... ரொம்ப ஆர்வமா இருக்கு!''

""மனிதர்கள் எல்லாம் பாலுக்குப் பசுமாடு வளர்க்கிறீர்கள் அல்லவா?.... அது போல நாங்கள் "அசுவினிப் பூச்சி' அப்படீன்னு ஒரு பூச்சியினத்தை வளர்க்கிறோம்!.... அந்த அசுவினிப்பூச்சி சுரக்கும் பாலைத்தான் எங்க எறும்புக் குழந்தைகள் சாப்பிடும்!'' 

""அப்போ நீங்களும் பாலுக்கு ஒரு ஏற்பாடு செய்துக்கிட்டுத்தான் இருக்கீங்க!....இதெயெல்லாம் நீங்க எங்க கிட்டேயிருந்துதானே கத்துக்கிட்டீங்க!.... '' 

""அண்ணே!.... உங்கள் இனம் பிறக்கறதுக்கு முன்னாலேயே நாங்கள் பிறந்து விட்டோம்!..... எங்களைப் பார்த்துத்தான் நீங்க பழகியிருக்க வேண்டும்!''

""அது சரி,..... எங்கே இனிப்பை வைத்தாலும், தேங்காய் வைத்தாலும், உடனே கண்டுபிடித்து வந்து விடுகிறீர்களே அது எப்படி?''

""எங்களுக்கு மோப்ப சக்தி ரொம்ப, ரொம்ப அதிகம்!..... ஆனா என்ன செய்யறது?..... மனிதர்கள், உலக உயிரினங்களில் எங்களையே அதிகம் கொல்கின்றனர்!..... எதையேனும் நாங்கள் கண்டுபிடித்துப் பிடித்து விட்டால், எங்களைக் காலால் நசுக்கிக் கொல்கின்றனர்....''

""பின்னே?.... நீங்க எங்க பொருட்களை எடுத்தால் என்ன செய்வது?''

""எது உங்கள் பொருள்?..... இயற்கை அளிக்கும் அத்தனைப் பொருட்களும் எல்லா உயிரினங்களுக்கும் உரியதுதானே!....மனிதர்கள் நீங்கள் உங்களுக்கும் பேசிக்கொண்டு எல்லை போட்டு, வீடு கட்டி, வேலி கட்டி உரிமை கொண்டாடுகிறீர்கள்!..... இது சரியா?.... யோசித்துப் பாருங்க அண்ணை!.... ''

""ம்ம் நீ சொல்றதும் சரிதான்!'' என்றான் அமுதன்.

""சரி இப்போ நீங்க கொஞ்சம் என்னை இறக்கி விடறீங்களா!.... நான் எங்க கூட்டத்தோட சேரணும்.... தேடுவாங்க!...'' என்றது எறும்பு.

பத்திரமாக மெதுவாக எறும்மைக் கீழே இறக்கி விட்டான் அமுதன். எறும்பு மெல்லத் தன் கூட்டத்தை நோக்கி விரைந்தது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com