நினைவுச் சுடர் ! கீதையின் ரகசியம்

காந்தியின் சீடர் ஒருவருக்கு கீதையின் ரகசியத்தை அறியஆவல். அவர் காந்திஜியைச் சந்தித்தார்.
நினைவுச் சுடர் ! கீதையின் ரகசியம்

காந்தியின் சீடர் ஒருவருக்கு கீதையின் ரகசியத்தை அறியஆவல். அவர் காந்திஜியைச் சந்தித்தார்.
 அவர் காந்திஜியிடம், "கீதையைப் புகழ்ந்து தாங்கள் பேசியிருப்பதைக் கேட்டிருக்கிறேன்!.....நான் ஆசிரமத்தில் ஒரு வாரம் தங்கியிருக்க விரும்புகிறேன்.... கீதையின் ரகசியத்தைத் தாங்கள் எனக்குத் தெளிவாக விளக்க முடியுமா?'' என்று வேண்டிகொண்டார்.
 அப்போது கட்டட வேலைக்காக ஏராளமான செங்கற்கள் வந்து இறங்கிக் கொண்டிருந்தன.
 அதற்கு காந்தி, "சரி, இதோ பாருங்கள் இங்கே ஏராளமான செங்கற்கள் வந்து இறங்கிய வண்ணம் இருக்கின்றன. இன்னும் இதுபோல் நான்கைந்து தினங்களுக்கு இம்மாதிரி செங்கற்கள் வந்து இறங்கிய வண்ணம் இருக்கும். இவற்றை சரியாக எண்ணிக் கணக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது!.... நீங்கள் இந்தப் பணியை செங்கற்கள் வந்து இறங்கும் நான்கைந்து தினங்களுக்குச் செய்து வாருங்கள்!....'' என்றார்.
 அந்த நண்பருக்கு ஏமாற்றமாக இருந்தது. "என்ன இது?..... மகாத்மா காந்தி இப்படி நம் கேள்விக்கு பதில் சொல்லாமல்....இப்படி செங்கல் எண்ணும் வேலையைக் கொடுத்துவிட்டாரே' என மனதில் நினைத்துக் கொண்டார். காந்தியின் சொல்லைத் தட்ட முடியுமா?.... அண்ணல் கேட்டுக்கொண்டபடி தினமும் வந்து இறங்கும் செங்கற்களை எண்ணி அதற்கான கணக்கையும் கொடுத்து வந்தார். ஓரிரு நாட்களில் அவருக்கு இந்த வேலை சலித்து விட்டது. உடனே, அங்கிருந்த ஒருவரிடம், அவர் கேட்டார்..... "இது என்ன, செங்கற்கள் எண்ணுவது என் வேலையா?... இதற்காகவா நான் இங்கு வந்தேன்?... இது தொழிலாளி செய்ய வேண்டிய வேலை!.... கீதையின் ரகசியத்தைக் கேட்பதற்காக தான் நான் இங்கே வந்தேன். எனக்கு செங்கல் எண்ணும் வேலைக் கொடுத்து என் நேரத்தை வீணாக்க வைக்கிறார் காந்திஜி!'' என்றார்.
 இந்த செய்தி எப்படியோ காந்தியின் காதுகளுக்கு எட்டிவிட்டது!
 காந்திஜி உடனே அந்த நண்பரைக் கூப்பிட்டார்.
 அவரிடம், " கீதையின் ரகசியத்தை இன்னுமா நீங்கள் அறிந்து கொள்ளவில்லை? தன்னலமற்ற பணி புரிவதுதான் கீதையின் ரகசியம்!'' என்றார்.
 நண்பர் திகைத்து, மனம் தெளிந்து போனார். ஆர்வத்துடனும், அக்கறையுடனும் காந்தியின் கட்டளையைத் தொடர்ந்து செய்தார்.
 (வளமான வாழ்வுக்கு அறிஞரின் வாழ்க்கை என்ற நூலிலிருந்து)
 ஜோ.ஜெயக்குமார்,
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com