பொன்மொழிகள்!

பேச வேண்டாதவற்றைப் பேசுபவனுக்கு கேட்கக் கூடாதவற்றைக் கேட்க நேரிடும்.
பொன்மொழிகள்!

பேச வேண்டாதவற்றைப் பேசுபவனுக்கு கேட்கக் கூடாதவற்றைக் கேட்க நேரிடும்.  
-  துருக்கி

அதிகப் பேச்சும் பொய்யும் சகோதரர்கள்.  
-  பீட்டி

பிறருடன் குறைவாகப் பேசு. உன்னுடன் அதிகமாய்ப் பேசு. 
- ஜெர்மன்

பேச்சு ஒரு நல்ல வெகுமதி.  அதைவிடச் சிறந்த வெகுமதி சிந்தனையே. 
-கதே 

இரு செவிக்கு ஒரு நாவுதான். எனவே பேசுவதைவிட இரு 
மடங்கு கேள்.  
-  யாரோ

நல்ல பேச்சு கேட்பவனுக்கு நல்ல அறுவடையாகும்.  
-  இந்தியா

அதிகம் பேசுபவனுக்கு பகைவர்களும் அதிகம் இருப்பார்கள்.  
-  சீனா

பேச்சு சிந்தனைக்கு இடைவெளி தரும்.  
- இந்தியா

பேச்சு மனதின் ஓவியமாகும்.  
-  யாரோ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com