பிஞ்சுக்கை  ஓவியத்திற்கு  ஒரு சின்னஞ்சிறு கதை!: ஆமைக்குப் பாதை!

""அம்மா இன்னைக்கு ஸ்டோரி டெல்லிங் ப்ரீயட் இருக்கு!.... ஏதாவது கதை சொல்லுமா?'' லில்லி கேட்டாள்.
பிஞ்சுக்கை  ஓவியத்திற்கு  ஒரு சின்னஞ்சிறு கதை!: ஆமைக்குப் பாதை!


""அம்மா இன்னைக்கு ஸ்டோரி டெல்லிங் ப்ரீயட் இருக்கு!.... ஏதாவது கதை சொல்லுமா?'' லில்லி கேட்டாள்.

""போனவாரமே உன்கிட்ட என்ன சொன்னேன். அடுத்த வாரம் நீயே தான் கதை சொல்லணும். என்கிட்ட கேட்காதே'' ன்னு சொன்னேன்ல' செல்லமாக ஆதட்டினாள் அம்மா.

""மிஸ் போனவாரமே சொன்னாங்க ஸ்டோரி சொன்ன மட்டும் போறாது அதுக்கு டிராயிங் போட்டுக் கொண்டு வரணும்னு சொல்லிடாங்க.''

""என்ன பண்றது?''

""நல்ல ஐடியா சொல்லு.. நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணணும்மா'' கெஞ்சினாள் லில்லி.

அம்மாவுக்கு ஒன்றும் ஒடவில்லை. ""சரி இன்னைக்கு நீ ஸ்கூல் போய்ட்டு வா. நாளைக்கு தானே ஸ்டோரி டெல்லிங் ப்ரீயடு நாம எதையாவது ரெடி பண்ணிடலாம்!....'' என்று ஆறுதல் சொல்லி அனுப்பிளாள்.

மாலை லில்லி பள்ளி முடிந்து வந்தாள்.

""அப்பா ஆபிஸ் முடிச்சிட்டு இப்போ வந்துடுவார். நாமே மூணு பேரும பீச்சு போகப் போறோம்!'' எனறு லில்லியை உற்சாக மூட்டினாள் அம்மா.

""அம்மா பீச்சுக்கு போறது சரி,..... எனக்கு ஸ்டோரி, டிராயிங் ரெண்டுமே நைட்டுக்குள் வேணும்..... நீ என்ன செய்யப் போறே?'' என்று கேட்டாள் லில்லி.

""வாடா செல்லம் பார்த்துபோம்னு'' சொல்லி, அப்பா வந்ததும் மூவரும் பீச்சுக்கு போனார்கள்.

கடலில் மூவரும் கால்களை நனைத்து விளையாடிக் கொண்டு இருந்தனர்.

ப்போது திடீரென ஒரு ஆமை கூட்டம் ஒன்று வந்துவிட்டது. அனைவருக்கும் வியப்பு!.....அவை அருகிலுள்ள காட்டுப்பகுதியை நோக்கி சென்றதை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அன்று இரவு வீடு திரும்பியதும் சாப்பிட்டு முடித்த பிறகு லில்லியிடம் அம்மா ""உனக்கு கதை தயார் செய்யலாம் வா'' என்று அழைத்தாள்.

லில்லியும் ஆர்வமாக சென்றாள். "" நாம் பார்த்தோமே ஆமை அவை காட்டிற்குள் சென்றால் என்ன செய்யும்?'' என்று கேட்டாள் அம்மா.

""தெரியாதும்மா..... நீயே சொல்!'' என்றாள் லில்லி.

""காட்டிற்குள் சென்ற ஆமைகளுக்கு இருளில் எங்கே செல்வது என்று தெரியாது. அந்த நேரத்தில் ஆமைகளுக்கு பாதை காட்டுவது மின் மினி பூச்சிகள்! அவை இருளில் பறக்கும் போது வெளிச்சத்தை காட்டும்! அப்படி வெளிச்சத்தை காட்டும் பூச்சிகளுக்கு ஆமை நன்றி சொல்லும்!'' என கற்பனையாக கதை சொல்ல லில்லி ஆச்சயரித்துடன் கேட்டு கொண்டிருந்தாள்.

""இந்தக் கதையை கருவாக வைத்து படம் வரைந்து கொடு!'' என்றாள் அம்மா.
அந்தக் கதைக்கு லில்லி வரைந்த ஒவியம் அற்புதமாக இருந்தது! அப்பாவும் அம்மாவும் பாராட்டினார்கள்!

படத்துடன் பள்ளிக்குச் சென்ற லில்லியின் ஒவியத்தைப் பார்த்ததும் சக மாணவர்கள், ""ஆமையை வைத்து நீ என்ன கதை சொல்லப்போற லில்லி?''ன்னு ஆவலாக கேட்டார்கள்.

அம்மா சொன்ன கதைக்கு எவ்வளவு மவுசு என தலைநிமர்த்தி கதை சொல்ல நடந்தாள் லில்லி.

எல்.தனுஸ்ரீ,
5 - ஆம் வகுப்பு,  அவினாசிபாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com