அணில்!

அணிலைப் பாரு தம்பி - அதன் அழகைப் பாரு தம்பி! - பட்டுத் துணி போல் மென்மை கொண்டு - அது 
அணில்!

அணிலைப் பாரு தம்பி - அதன் 
அழகைப் பாரு தம்பி! - பட்டுத் 
துணி போல் மென்மை கொண்டு - அது 
தாவும் பாரு தம்பி!

முன்னங்காலைத் தூக்கி - அது 
முழிக்கும் பாரு தம்பி! - ஒரு 
சின்னக் குழந்தை போலே - அதன் 
சேட்டை பாரு தம்பி!

முருங்கை மரத்தில் ஏறி - அது 
முருங்கைப் பூவை உதிர்க்கும்! - நாம் 
நெருங்கிச் சென்று பார்த்தால் - நமைக் 
கண்டு குதித்து ஓடும்!

கொய்யாப் பழத்தைக் கொறிக்கும்! - அது 
கொறித்த பழமோ சுவைக்கும்! - பசு 
நெய்யின் நிறத்தில் இருக்கும் - அணில் 
நெருங்கி வந்து சிரிக்கும்!

குஞ்சம் போன்ற வாலும் - அதன்
குட்டிக் குட்டிக் காலும் - நம் 
நெஞ்சை ஈர்க்கும் நாளும் - நம் 
நினைவில் என்றும் வாழும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com