அதிசய டாலர்!

1794 ஆம் ஆண்டு ஃபிலடெல்பியா நாணயச் சாலையில் அமெரிக்காவின் முதல் டாலர் பதிப்பு! அப்போது ஜனாதிபதியாக இருந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன். 
அதிசய டாலர்!

1794 ஆம் ஆண்டு ஃபிலடெல்பியா நாணயச் சாலையில் அமெரிக்காவின் முதல் டாலர் பதிப்பு! அப்போது ஜனாதிபதியாக இருந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன். 

அந்த டாலர் வெள்ளியில் அச்சிடப்பட்டது. ஒரு பக்கம் தலைமுடியை முடிந்துகொள்ளாத லிபர்டியின் உருவம்! அமெரிக்கக் கழுகின் உருவம் மறுபுறம்! ராபர்ட் ஸ்காட் என்பவர் இந்த டாலரை வடிவமைத்தார். ஃபிலடெல்ஃபியா மின்ட்டில் (மின்ட் என்றால் நாணயச்சாலை என்று பொருள்)  அச்சிட்டார்கள். 

இந்த நாணயம் குறைந்த அளவே அச்சிடப்பட்டது. அவை உயரதிகாரிகளுக்கும், சில முக்கியஸ்தர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.

இதில் மிக சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த டாலர் ஜனவரி 24 -ஆம் தேதி 2013 - ஆம் ஆண்டு அமெரிக்காவில்  ஸ்டேக் போவர்ஸ் என்பவரால்  ஏலத்திற்கு விடப்பட்டது! ஏலத்தில் அப்போது இந்த டாலர் சுமார் 10 மில்லியன் டாலருக்கு விலை போனது!

பத்து மில்லியன் டாலருக்கு இதை ஏலத்தில் எடுத்தவர் "ப்ரூஸ் மோர்கன்' என்பவராவார்.

இந்த டாலர் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மறுபடியும் ஏலத்திற்கு வந்தது. ஆரம்பத் தொகையே மிக அதிகமாக இருந்ததால் யாரும் இந்த டாலரை ஏலத்தில் கேட்கவில்லை. (ம்... கரோனா காலம்!) 

முதலில் 10 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுத்த "ப்ரூஸ் மோர்கன் இந்த டாலரை "ஃப்ளோயிங் ஹேர் டாலர்' என்று அழைக்கிறார்.  அவருக்கு நஷ்டமா?.... தெரியவில்லை! பார்ப்போம்! மற்றும் ஒரு முறை ஏலம் விடாமலா போய்விடுவார்கள்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com