அங்கிள் ஆன்டெனா

நிறைய தொழிற்சாலைகளுக்கு ஏராளமான வெப்பம் தேவைப்படுகின்றது. இதற்காக அவற்றில் பலவித பொருட்களை எரித்து வெப்பத்தை உண்டாக்குகிறார்கள்.
அங்கிள் ஆன்டெனா

 கேள்வி:
 பெரிய தொழிற்சாலைகளின் புகை போக்கிகள் மிகவும் உயரமாக அமைக்கப்பட்டிருப்பதன் காரணம் என்ன?
 பதில்: நிறைய தொழிற்சாலைகளுக்கு ஏராளமான வெப்பம் தேவைப்படுகின்றது. இதற்காக அவற்றில் பலவித பொருட்களை எரித்து வெப்பத்தை உண்டாக்குகிறார்கள். சிலவற்றில் மரக்கட்டைகள், சிலவற்றில் நிலக்கரி, சிலவற்றில் பெட்ரோலியம் போன்றவை.
 இவை அனைத்துமே எரிக்கப்படும்போது மிக அதிக அளவில் கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்லைட்) வெளியிடுபவை. உங்களுக்கு நன்றாகச் தெரியும்.
 கரியமில வாயு மிகுந்த விஷத்தன்மை கொண்டது என்றது. அதை நாம் அதிகமாக சுவாசித்தால் உடல் நலக் கேடு உண்டாகும்.
 உயரம் குறைவான புகை போக்கிகள் இருந்தால் நாம் சுவாசிக்கும் காற்றில் அவற்றிலிருந்து வரும் கரியமில வாயு எளிதாகக் கலந்து விடும். இந்தக் காற்றை நாம் சுவாசித்தால் நமக்குத்தான் கேடு.
 மேலும் கரித்துகள்கள் வேறு இந்தப் புகை போக்கிகள் வழியே வெளி வரும். இந்த துகள்கள் நமக்கு மூச்சுத் திணறல் ஆகிய உபாதைகளைத் தரக்கூடியவை.
 புகை போக்கிகள் மிக உயரமாக இருந்தால் வானில் உயரத்தில் இந்தக் கரியமில வாயுவும் கரித்துகள்களும் விண்வெளியில் கலந்து விடும்.
 அப்போது நமக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால்தான் புகைபோக்கிகள் மிக உயரமாக அமைக்கப்படுகின்றன.
 -ரொசிட்டா
 அடுத்த வாரக் கேள்வி
 வானில் தெரியும் மேகம் ஏன் எப்போதும் வெண்மை நிறத்தில் இருக்கிறது?
 பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம்
 நல்ல பதில் கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com