கடி (04/04/2020)

* "எங்கேடா தண்ணியோட பானையைத் தூக்கிக்கிட்டுப் போறே?''"ஊர்லேர்ந்து வந்திருக்கிற அங்கிள்தான், "குடிக்க பானைத் தண்ணி கொண்டு வா'
கடி (04/04/2020)

* "எங்கேடா தண்ணியோட பானையைத் தூக்கிக்கிட்டுப் போறே?''
"ஊர்லேர்ந்து வந்திருக்கிற அங்கிள்தான், "குடிக்க பானைத் தண்ணி கொண்டு வா' ன்னு கேட்டாரு!''
வி.ரேவதி, 
தஞ்சாவூர்.

* "தானத்திலே பெரிய தானம் என்னது தெரியுமாடா?''
"மைதானம்!''
கே.எம்.நஜ்முதீன், 
ஸ்டார் மார்பிள் அண்டு கிரனைட்ஸ், 
104/9, லட்சுமி புரம், 
காயல்பட்டினம்.

* "எங்க அக்கா ரங்கோலி கோலத்தைத் தப்பா போட்டுட்டா!''
"...."ராங்'கோலி ஆயிடுச்சுன்னு சொல்லு!''
சரஸ்வதி செந்தில், 
12, சேஷாசல செட்டித் தெரு, 
பொறையார் - 609307.

* "கையிலே என்னடா?''
"உளுந்து, பெருங்காயம்!''
"கால்லே என்னடா கட்டு?''
"விழுந்து சிறுகாயம்!''
மோகனா அம்பி, 
கும்பகோணம்.

* "முத்தமிழ்னா என்ன தெரியுமாடா?''
"தெரியும்!...... செய்யுள் பகுதி, உரைநடைப்பகுதி, துணைப் பாடப்பகுதி!''
நா.வினோத்குமார், 
பாராஞ்சி

* "கொசு கடிக்காம இருக்க இந்த கிரீமைத் தடவு......''
"அதெப்படி முடியும்?....ஒவ்வொரு கொசுவாப் பிடிச்சு இந்த கிரீமைத் தடவறதெல்லாம் முடியிற காரியமா?''
ஜி.இனியா, 
கிருஷ்ணகிரி.
வாரம் 2 டி-சர்ட் பரிசு நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் 
தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com