சாணக்கியரின் பொன்மொழிகள்

மலர்களின் வாசம் காற்று வீசும் திசையிலேயே செல்லும். ஆனால் ஒருவர் செய்யும் தர்மமோ நாலா திசையிலும் செல்லும்.
சாணக்கியரின் பொன்மொழிகள்

மலர்களின் வாசம் காற்று வீசும் திசையிலேயே செல்லும். ஆனால் ஒருவர் செய்யும் தர்மமோ நாலா திசையிலும் செல்லும்.

இழந்த செல்வம், ஏற்பட்ட அவமானம், கேட்ட வசைச்சொல் ஆகியவற்றை விவேகமுள்ள மனிதன் வெளியே சொல்லமாட்டான்.

ஆசிரியர், தலைவன், நண்பன், அறிவாளி ஆகியோரிடம் வாக்குவாதம் செய்யவேண்டாம். அதுமட்டுமல்ல.... முட்டாளிடமும் வீண்வாதம் வேண்டாம்.

உனது பலவீனத்தைக் குறிவைப்பவன் உன் நண்பன் அல்ல!

லட்சியம் நிறைவேறும் வரைஅதைப்பற்றி வெளியில் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.

சோம்பேறியும், திருடனும் ஒன்றே.

நியாயம் இல்லாதவனுக்குக் கோபம் வரும்.

உற்சாகம் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது.

உழைக்கும் மனிதனின் உறக்கம் இனிமையானது.

அதிகமாகக் கடன் வாங்குபவன் அதிகமாக இழப்பான்.  நித்தியானந்தம், திருத்தணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com