கடி!

கடி!

"உடம்பு சரியில்லேன்னு லீவு போட்டேன்..... அதுக்கு டாக்டர் சர்டிஃபிகேட் கேட்டாங்க!''

• "உடம்பு சரியில்லேன்னு லீவு போட்டேன்..... அதுக்கு டாக்டர் சர்டிஃபிகேட் கேட்டாங்க!''
"டாக்டர் கிட்டே கேட்டியா?''
"அது அவர் கஷ்டப்பட்டு படிச்சு வாங்கின சர்டிஃபிகேட்டாம்!.... யாருக்கும் கொடுக்க முடியாதுன்னுட்டாரு!''
ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல்.

• "டேய், எதுக்குடா மெழுகுவர்த்தி 
ஏத்தி வெச்சிருக்கே?''
"கரண்ட் இல்லேடா!''
"சரிசரி, ஃபேனையாவது போடு!''
"லூசாடா நீ!..... மெழுகுவர்த்தி 
அணைஞ்சுடாது?''
ஜோ.ஜெயக்குமார், 
3/6, அன்னை இல்லம், அன்னை நகர், 
நாட்டரசன்கோட்டை - 630556.

• "ஐஸ் வாட்டர் ஏன் கூலாவே இல்லே?''
"அதுக்கு ஜுரம்னு நெனைக்கிறேன்!''
ஏ.நாகராஜன் சென்னை - 600075.

✶"கறுப்பும் கரையுது!..... வெள்ளையும் 
கரையுது!''
"என்னடா சொல்றே?''
"காகமும் கரையுது!..... ஐஸ்க்ரீமும் கரையுது!''
ஆர்.பி.கவின், 3 - ஆம் வகுப்பு, "டி' ...., நாடார் துவக்கப்பள்ளி, ரயில்வே பீடர் சாலை, 
இராசாபாளையம் - 626117.

• "ராஜா!.... எங்கேடா இருக்கே?''
"பெஞ்சுக்கு அடியிலே இருக்கேன் சார்!''
"ஏண்டா?''
"நீங்கதான் நான் இருக்கிற இடமே தெரியக்கூடாதுன்னு சொன்னீங்க!''

• "தேதியைக் கிழிச்சதும், வாயிலே போட்டுக்கிட்டா நல்லதாப்பா!''
"என்னடா உளர்றே?.....யாரு சொன்னா?''
"டேட்ஸ் சாப்பிட்டா நல்லதுன்னு அங்கிள் சொன்னாருப்பா!''
எ.கே.மாதவன், அந்தியூர் - 638501.
வாரம் 2 டி-சர்ட் பரிசு நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் 
தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com