தீதும் நன்றும்!

எப்போதும் பள்ளிவிட்டவுடன், மணி, பள்ளி மைதானத்தில் ஒருமணிநேரம் விளையாடிவிட்டு, மண்ணும் தூசியுமாக அழுக்கான சீருடையுடனும், கலைந்த தலைமுடியுடனும் வீட்டுக்கு வருவது வழக்கம்.
தீதும் நன்றும்!

எப்போதும் பள்ளிவிட்டவுடன், மணி, பள்ளி மைதானத்தில் ஒருமணிநேரம் விளையாடிவிட்டு, மண்ணும் தூசியுமாக அழுக்கான சீருடையுடனும், கலைந்த தலைமுடியுடனும் வீட்டுக்கு வருவது வழக்கம். அவனது அம்மா எவ்வளவு முறை கண்டித்தும், அவன் மாறியதேயில்லை.

வழக்கம்போல் அன்றும் அவன் வந்தான். ஆனால் வந்தவுடன் அம்மாவிடம் ஒரு கேள்வி கேட்டான்: "அம்மா, ஆசிரியர் "தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று ஒரு வாக்கியத்தைக் கூறினார். அதற்கு என்னம்மா அர்த்தம்?"

அவனது அம்மா உடனே பதிலெதுவும் கூறாமல், அறையிலிருந்த ஆளுயர நிலைக்கண்ணாடி முன்னே அவனைப்போய் நிற்கும்படி கூறினாள். அவன் போய் நின்றதும், அம்மா கேட்டாள்: "இப்போ கண்ணாடியிலே பார்க்கிறதுக்கு நீ எப்படியிருக்கே?"

"அழுக்கா, அசிங்கமா இருக்கும்மா" என்றான் மணி.

"சரி, போய்க் குளித்துவிட்டு வேறே சட்டை போட்டுக்கிட்டு வா" என்று அம்மா கூற, அவன் உடனே போய் நன்றாகக் குளித்துவிட்டு, தலையை அழகாக வாரிக்கொண்டு , சுத்தமான சட்டை அணிந்தபடி அம்மாவிடம் வந்து மறுபடியும் அந்தக் கேள்வியைக் கேட்டான். அம்மா, அவனிடம், "இப்போ மறுபடியும் கண்ணாடி முன்னே நின்று , நீ எப்படியிருக்கேன்னு பார்த்துச் சொல்லு" என்று கூற, அவன் மறுபடியும் கண்ணாடி முன்னே சென்று நின்று பார்த்தான்.

"இப்போ நான் ரொம்ப அழகாத் தெரியறேன்மா" என்ற மணியை நோக்கி அம்மா கூறினாள்:

" இந்தக் கண்ணாடிப் போலத்தான் நம்மளோட வாழ்க்கை. நீ அழுக்காயிருந்து அதைப் பார்த்தப்போ உன்னோட அழுக்கு பிம்பத்தையும், சுத்தமாயிருந்து பார்த்தப்போ உன்னோட அழகையும் பிரதிபலிப்பதைப் போல, நீ உன் வாழ்க்கையில் நல்லதை எண்ணி, நல்லதைப் பேசி, நல்லதைச் செய்தா, உனக்கு நல்லதுதான் திரும்பக் கிடைக்கும். தீயதையே எண்ணி, தீயதையே பேசி, தீயதையே செய்து மற்றவர்களைப் பகைத்துக் கொண்டால், அதனால் உனக்குத் திரும்பக் கிடைக்கிறதும் தீமையானதாகத்தானிருக்கும். உன்னோட நல்ல , மற்றும் தீய செயல்களுடைய எதிரொலிதான் உனக்கு வருகிற நன்மையையும் தீமையும். மற்றபடி, பிறமனிதர்கள் யாருமே வேண்டுமென்றே யாருக்கும் நன்மையோ தீமையோ செய்வதில்லை. நாம் எப்படி நடந்துக்கிறோமோ, அதற்கேற்றபடிதான் நமக்கும் திரும்பக் கிடைக்கும். இதைத்தான் "தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்று கூறுகிறோம். அவரவருடைய நன்மையும் தீமையும் அவரவருடைய கையில்தானிருக்கிறது."

மணி புரிந்துகொண்டான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com