கல்விக்காக!

முன்னொரு காலத்தில் தங்கதாசன் என்ற பண்டிதர் இருந்தார். அவர் ஏராளமான நீதி நூல்களை எழுதினார். ஒவ்வொரு நாடாகச் சென்று மன்னர் முன்னிலையில் அந்த நீதி நூல்களை எல்லாம் படித்துக் காட்டுவார்.
கல்விக்காக!

முன்னொரு காலத்தில் தங்கதாசன் என்ற பண்டிதர் இருந்தார். அவர் ஏராளமான நீதி நூல்களை எழுதினார். ஒவ்வொரு நாடாகச் சென்று மன்னர் முன்னிலையில் அந்த நீதி நூல்களை எல்லாம் படித்துக் காட்டுவார்.

அவரது நீதி நூல்களில் இடம் பெற்ற கதைகளை எல்லாம் எல்லோரும் அக்கறையோடு கேட்பார்கள். ஆச்சரியப்படுவார்கள்.

ஒரு நாள் தங்கதாசன் வேங்கை நாட்டிற்குச் சென்றார். அந்நாட்டின் மன்னர் மதியழகன் தங்கதாசனை அன்போடு வரவேற்றார். தங்கதாசனிடம் நீதிக் கதைகளைக் கேட்டார்.

தங்கதாசனும் நீதிக் கதைகளை அற்புதமாகச் சொன்னார். அங்கிருந்த அனைவரும் பாராட்டினர். மன்னருக்கும் கதைகள் பிடித்திருந்தன. தங்கதாசனுக்கு ஏராளமான பொற்காசுகளை வெகுமதியாக வழங்கினார்.
தங்கதாசனுக்கு அந்தப் பொற்காசுகள் அளவுக்கு மீறியதாகத் தெரிந்தது. அரசர் தந்த அந்த வெகுமதியில் சிறிது எடுத்துக் கொண்டார். மீதி இருந்த பொற்காசுகளை அரசரிடம் தந்து, ""மன்னா!.... என்னை மன்னிக்க வேண்டும்!.... எனக்குத் தாங்கள் அளவுக்கு மீறித் தந்து விட்டீர்கள். இந்தத் தொகையை இந்நாட்டின் கல்வித் தொண்டிற்காக ஏற்றுக் கொள்ளுங்கள். மறுக்க வேண்டாம்'' என்றார்.

மன்னரோ, தங்கதாசனின் பரந்த மனத்தைப் பாராட்டினார். ""நீங்கள் சிறந்த கல்விமானாகவும், நீதி போதனைக்காக சுவாரசியமான கதைகள் புனையும் திறமைசாலியாக இருந்தும், இந்நாட்டின் மிக முக்கியமான கல்வி வளர்ச்சி பற்றி அக்கறை கொண்டிருக்கிறீர்கள்!.... கல்வி கற்போரை ஊக்கப்படுத்த நினைக்கிறீர்கள்!.... உம்மை நான் பாராட்டுகிறேன்!'' என்றார்.
நீதி : கல்விக்காக தர்மம் செய்வது சிறந்த தர்மமாகும்.

"பயன் தரும் பண்பு நெறிக் கதைகள்' என்னும் நூலிலிருந்து.....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com