நினைவுச் சுடர்!: அன்புப் பரிசு!

ஒரு நாள் காந்திஜி தன் மேஜையில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த காந்தியின் நண்பர் காலேல்கர், ""என்ன தேடுகிறீர்கள்?'' என்று கேட்டார். 
நினைவுச் சுடர்!: அன்புப் பரிசு!


ஒரு நாள் காந்திஜி தன் மேஜையில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த காந்தியின் நண்பர் காலேல்கர், ""என்ன தேடுகிறீர்கள்?'' என்று கேட்டார். 

""இந்த மேஜையில் ஒரு சின்னஞ்சிறு பென்சிலை வைத்திருந்தேன்..... அதை இப்போது காணவில்லை!.... அதைத்தான் தேடுகிறேன்'' என்றார் காந்தி.

இதைக்கேட்ட காந்தியின் நண்பர் காலேல்கர், தன் பையிலிருந்து ஒரு பென்சிலை எடுத்தார். அதை காந்தியிடம் நீட்டி, ""இந்தாங்க,..... இதை வாங்கிக்கங்க!'' என்றார். 

""இருங்கள் இன்னும் சற்றுத் தேடிப்பார்க்கிறேன்...'' என்றார் காந்தி. 

""விடுங்கள்.....  அது கிடைக்கும்வரை இந்தப் பென்சிலை உபயோகப் படுத்திக்கங்க.... அதை நானும் தேடிப் பார்க்கிறேன்.... கிடைத்தவுடன் மேஜையில் வைத்து விடுகிறேன்!'' என்றார் காலேல்கர்.

காந்தி அதற்கு இணங்கவில்லை. அவர் காலேல்கரைப் பார்த்து, ""நீங்கள் நம்ப மாட்டீர்கள்!..... நான் சென்னைக்குச் சென்றபோது தொண்டர் நடேசன் வீட்டில் தங்கியிருந்தேன்.... நடேசனின் பையன் நான் தேடுகிற அந்தப் பென்சிலை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தான். உங்களுக்குத் தெரியாது!அவன் எனக்கு அதை எவ்வளவு அன்புடன் வழங்கினான் தெரியுமா!.... அப்பேற்பட்ட அந்தப் பென்சிலை நான் தொலைத்து விடக் கூடாது!..... அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது!'' என்றார் காந்தி. 

பரிசு சிறியதாயினும், பரிசு கொடுத்தது சிறியவனாக இருந்தாலும் அதற்கு எவ்வளவு மதிப்பளிக்கிறார் காந்தி என்று வியந்தார் காலேல்கர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com