யார் சிறந்த ஓவியர்?

ஒரு ஊர்ல, "சித்திரப் பிரியன்' னு ஒரு ராஜா இருந்தாராம்! பாவம்! அவருக்கு ஒரு கண்ணில் புரை விழுந்திருக்கும்!
யார் சிறந்த ஓவியர்?

ஒரு ஊர்ல, "சித்திரப் பிரியன்' னு ஒரு ராஜா இருந்தாராம்! பாவம்! அவருக்கு ஒரு கண்ணில் புரை விழுந்திருக்கும்! ஆனா அவரு ரொம்ப நல்லவரு! ராஜாவுக்கு ஒரு நாள் தன்னோட ஓவியத்தை வரைஞ்சு வெச்சுக்கணும்னு ஆசை வந்தது! அதுக்காக அவரு, தியாகசீலன், லோகநாயக், ரகுந்தன். அப்படீன்னு மூணு ஓவியர்களை வரவழைத்தார். மூணு பேரும் நல்லா ஓவியம் வரைவாங்க! யாரு நல்லா வரையராங்களோ அவங்களுக்கு முதல் பரிசுன்னும் அறிவிச்சாரு ராஜா சித்திரப் பிரியன்.
 ராஜாவின் ஓவியத்தை முதலில் தியாக சீலன் வரைஞ்சார். அந்த ஓவியம் நல்லாத்தான் இருந்தது. ஆனா ராஜாவுக்கு ஒரு கண்ணுலே வெள்ளையா புரை இருந்தது இல்லையா?.... அதை அப்படியே வரைஞ்சுட்டாரு. ஓவியத்தைப் பார்த்த ராஜாவுக்கு வருத்தமாப் போச்சு!
 ராஜாவுக்கு நெருக்கமானவங்க தியாகசீலனைத் திட்டினார்கள்.
 "ஓவியர் தியாகசீலனை ஒண்ணும் சொல்லாதீங்க!.... அவர் என்ன செய்வாரு பாவம். இருக்கறதைத்தானே வரைய முடியும்!'' அப்படீன்னு ராஜா சொல்லித் தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கிட்டார். மத்தவங்களையும் சமாதானப்படுத்தினாரு.
 அடுத்ததா, ரகுநந்தன் ராஜாவோட ஓவியத்தை வரைஞ்சாரு. அவருக்கு ராஜா மேலே மதிப்பு இருந்தது. அன்பும் இருந்தது. தியாகசீலனை எல்லோரும் திட்டினதை அவரு பார்த்ததாலே அவரு வரைஞ்ச ஓவியத்திலே ராஜாவுக்கு ரெண்டு கண்ணையும் அழகா வரைஞ்சுட்டாரு. பார்க்கறதுக்கும் ஓவியம் நல்லாத்தான் இருந்துச்சு! ஆனா சபையிலே இருந்த சிலர், "இதென்னது இது?.... ராஜாவுக்குத்தான் ஒரு கண்ணுலே புரை இருக்கே.... இந்த ஓவியம் உண்மைக்குப் புறம்பா இருக்குதே.... இதை எப்படி ஏத்துக்க முடியும்?.....'' அப்படீன்னு முணுமுணுத்தாங்க..... (ம்ம்....இப்படித்தான் எது செஞ்சாலும் குறை சொல்றதுக்குன்னே சிலர் இருப்பாங்க.... சரி,.... நாம கதைக்கு வருவோம்...)
 ராஜா சித்திரப்பிரியனுக்கு இந்த ஓவியமும் பிடிச்சிருந்தது. ஆனா அவரும், "என்ன லோகநாயக், நீங்க என் மேலே மதிப்பு வெச்சிருக்கறவருதான்.... அதுக்காக உண்மைக்குப் புறம்பா என் படத்தை வரைஞ்சுட்டீங்களே... பரவாயில்லை... நல்லாத்தான் இருக்கு!'' அப்படீன்னு அந்த ஓவியத்தையும் பாராட்டி எடுத்து வெச்சுக்கிட்டார் ராஜா.
 அடுத்தாப்போலே, ரகுநந்தன் ஓவியத்தை வரைஞ்சார். அவருக்கு ஒரு யோசனை தோணிச்சு. ராஜாவை புரை இருக்கிற பக்கம் தெரியாதமாதிரி முகத்தைத் திருப்பி வெச்சுக்கிட்டு இருக்கிறா மாதிரி வரைஞ்சுட்டார். ஓவியமும் நல்லா கம்பீரமா இருந்தது! எல்லோரும் கைதட்டிப் பாராட்டினாங்க.
 "ரொம்ப அற்புதமா இருக்கு'' ன்னு ராஜாவும் சொன்னாரு!
 இந்த ஓவியங்களிலே எது சிறந்த ஓவியமோ அதுக்குப் பரிசு தரணும்னு ராஜா முடிவு செய்ய நினைச்சாரு. அவரோட மந்திரி பிருகதீஸ்வர் கிட்டே கேட்டாரு. அவரும் அவரோட ஆலோசனையைத் தந்தாரு.
 மறுநாள்.....
 எல்லோருக்குமே பரிசை சரி சமமாக வழங்கினாரு ராஜா! எல்லாம், மந்திரி பிரகதீஸ்வர் சொன்ன ஆலோசனையாலேதான்.
 முதல்லே வரைஞ்ச தியாகசீலன் உண்மையானவரு.... அப்படியே வரைஞ்சாரு. அதனாலே அவருக்கு முதல் பரிசைக் கொடுக்கலாம்.... ரெண்டாவதா வரைஞ்ச லோகநாயக் ராஜா மேலே, மரியாதையும், அன்பும் வெச்சிருக்கிறவரு.... அதனாலே ராஜாவோட ஓவியத்தை குறையைத் தீர்த்து அழகா வரைஞ்சார். அதனாலே லோகநாயக்குக்கும் முதல் பரிசைக் கொடுக்கலாம்!.... மூணாவதா வரைஞ்சவரு ராஜாவின் குறையையும் மறைச்சு வரைஞ்சுட்டாரு! இவர் எல்லாரோட நல்ல பெயரையும் வாங்கிக்கிட்டார்!... இவருக்கும் முதல் பரிசைக் கொடுக்கலாம். இந்த ஓவியர்களோட எண்ணம் எல்லாமே நல்லாத்தான் இருந்தது. மூணு ஓவியங்களும் நல்லாத்தான் இருக்கிறது! அதனாலே எல்லோருக்கும் முதல் பரிசாகவே வழங்கிடலாம்னு மந்திரி பிரகதீஸ்வர் சொன்னாரு.
 ராஜாவுக்கும் அது சரின்னு பட்டுது. அதனாலே எல்லா ஓவியர்களுக்கும் பரிசு சமமாக வழங்கினாரு ராஜா. மூணு ஓவியர்களும் சந்தோஷமா பரிசை வாங்கிக்கிட்டு வீட்டுக்குப் போனாங்க....அந்த மூணு ஓவியங்களையும் மண்டபத்தில் மாட்டி வெச்சுக்கிட்டாரு சித்திரப்பிரியன் ராஜா!
 நெ.இராமன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com