அங்கிள் ஆன்டெனா

ஒரே நாளில் இறந்து விடுமாமே ஈசல் பூச்சி? ஏன் இப்படி?
அங்கிள் ஆன்டெனா

கேள்வி: ஒரே நாளில் இறந்து விடுமாமே ஈசல் பூச்சி? ஏன் இப்படி?

பதில்: மெலிதான உடலையும் மிக மிக மெல்லிய இறகுகளையும் கொண்டவை ஈசல்கள். இவற்றுக்கு அந்த மெல்லிய வலுவற்ற இறகுகள் அதன் கடைசிக் காலத்தில்தான் முளைக்கின்றன. அதாவது அவை சாகும் தருவாயில்தான் இந்த இறகுகள் முளைக்கின்றன. 

ஆனால், இந்த சிறகுகள் முளைப்பதற்கு முன் - அதாவது முட்டையிலிருந்து புழுவாக இவை வெளிவந்த காலத்திலிருந்து தங்கள் வாழ்நாளை மிக மிக மகிழ்ச்சியாகக் கழிக்கின்றன.

இவற்றின் கடைசி அத்தியாயமான இமேகோ பருவம் ஒரே ஒரு நாளைக் கொண்டது. இந்தக் காலத்தில்தான் சிறகுகள் முளைத்து முழு வளர்ச்சியடைகின்றன. நேற்று வரையில் தரையில்  உலவி வந்த ஈசல்கள், சிறகுகள் முளைத்தவுடன்  உற்சாகமாக வானில் பறக்க ஆரம்பிக்கின்றன. 

இந்த ஒரு நாளில் அவை அநேகமாக சாப்பிடுவதுகூடக் கிடையாது. உற்சாகமாகப் பறந்து வாழ்வைக் கொண்டாடி மடிந்து போகின்றன. வியக்க வைக்கும் இயற்கை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com