அங்கிள் ஆன்டெனா

ஒற்றை ஆணியில் சுற்றும்போது நிற்கும் பம்பரம் சுற்றி முடித்தவுடன் கீழே படுத்து விடுவதேன்?
அங்கிள் ஆன்டெனா


கேள்வி: ஒற்றை ஆணியில் சுற்றும்போது நிற்கும் பம்பரம் சுற்றி முடித்தவுடன் கீழே படுத்து விடுவதேன்?

பதில்: பம்பரம் ஒற்றைக்காலில் சுற்றுவதற்குக் காரணம், மேலிருக்கும் உருளையான மரக்கட்டைக்கும் கீழே சரியாக நடுவில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிக்கும் உள்ளே புவி ஈர்ப்பு விசை ஒரே நேர்க் கோட்டில் இருப்பதால்தான்.
இதனால் சாட்டையால் சுழற்றி பம்பரத்தைக் கீழே விடும்போது அது சாட்டையின் சுழற்சியினால் ஏற்பட்ட விசையால் வேகமாகச் சுழல ஆரம்பிக்கிறது. 
இந்தச் சாட்டை சுழற்சி சரியாக இல்லாவிட்டால் பம்பரம் 
சுழலாது. மேலும் ஆணிப்பாகம் பூமியில் படாமல் பக்கவாட்டில் பம்பரம் தரையிறங்கினாலும் சுழலாது.
பம்பரம் சுழல் சரியான சுழற்சியும், புவி ஈர்ப்பு விசையும், சுற்றியுள்ள காற்றும் மிகவும் அவசியம்.
தனக்குக் கிடைக்கும் ஓரளவு விசையை வைத்துக் கொண்டு சற்று நேரம் சுழலும் பம்பரம், விசை முடிந்தவுடன் தனது புவி ஈர்ப்புவிசையினால் சுழற்சியை நிறுத்திவிட்டுப் படுத்துவிடுகிறது. அவ்வளவுதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com