குதிரைகள்!

உலகில் சுமார் 180 வகையான குதிரைகள் இருக்கின்றன. மிகக் குட்டையான வகைக் குதிரைகள் உள்ளன என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?
குதிரைகள்!

குதிரைகள்!


உலகில் சுமார் 180 வகையான குதிரைகள் இருக்கின்றன. மிகக் குட்டையான வகைக் குதிரைகள் உள்ளன என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? அந்த வகைக் குதிரையை "ஃபாலபெல்லா'  என்று அழைப்பர். நன்கு வளர்ந்த ஃபாலபெல்லா குதிரையின் உயரம் சுமார் இரண்டரை அடி மட்டுமே! மிகவும் அழகாக இருக்கும் இக்குதிரையில் சிறுவர் சிறுமியர் ஏறிச் சவாரி செய்வது வேடிக்கையாக இருக்கும்!

மிக உயரமான குதிரையின் பெயர் "ஷயர்' ஆகும்! இதன் எடை 900 கிலோவிலிருந்து 1100 கிலோ வரை இருக்கும்! சுமார் ஆறு அடி உயரம் வரை வளரும்! திடமான உடலுடன் பார்ப்பவரை பிரமிக்க வைக்கும்!

மிகவும் அதிக எடையை இழுக்கும் திறன் இந்தவகைக் குதிரைக்கு உண்டு. இங்கிலாந்தில்  இந்த வகைக் குதிரைகள் விவசாயத்தில் நிலத்தை உழுவதற்குப் பெரிதும் பயன் பட்டன. சரக்குகள் நிரம்பிய வண்டிகள் இழுக்கவும், சவாரி செய்யவும் மிகவும்  பயன்படுத்தப்பட்டன. 

இந்தக் குதிரைகள் செம்பழுப்பு, கறுப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் இருக்கும்! போட்டிகளில் அழகாக நடன நடை இடும் இக்குதிரைகள் அனைவரையும் மிகவும் வசீகரிக்கும்! பொதுவாகவே குதிரைகளுக்கு நினைவாற்றல் அதிகமாம்! இன்பமான நிகழ்வு அல்லது மிகவும் துன்பமான நிகழ்ச்சி நடந்த பல ஆண்டுகளுக்குப் பின்னரும் அவற்றை நினைவில் வைத்திருக்குமாம்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com