கடலில் மிதக்கும் தூய தண்ணீர்க் குடுவைகள்! 

மலேசியாவில்  ஆசியன் பசிபிக் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் உள்ளது. அதைச் சேர்ந்த நான்கு மாணவர்களின் கண்டுபிடிப்பு ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது!
கடலில் மிதக்கும் தூய தண்ணீர்க் குடுவைகள்! 


மலேசியாவில்  ஆசியன் பசிபிக் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் உள்ளது. அதைச் சேர்ந்த நான்கு மாணவர்களின் கண்டுபிடிப்பு ஆச்சரியத்தில்  ஆழ்த்துகிறது!

சரி, நாம் நெடுந்தூரச் சாலை வழிப்பயணங்களில் நடுவே தாகம் எடுத்தால் ஆங்காங்கே நின்று தண்ணீர் கிடைக்குமிடம் சென்று தாகத்தைத் தீர்த்துக் கொள்கிறோம். சிறிது பாட்டில்களிலும் பிடித்துக் கொள்கிறோம்! ஆனால் கடலின் ஆழத்தில் ஆராய்ச்சி செய்பவர்கள் இதற்கு வழியின்றி இருக்கின்றனர். மற்றும் படகுகளில் நெடுந்தூரம் பயணம் செய்யும் மனிதர்களும் அளவுக்கு அதிகமான நீரை எடுத்துச் செல்வது இயலாதது.  இதற்கு ஒரு தீர்வு  காண முயன்றிருக்கின்றனர் சில மாணவர்கள்!

பென்னி பே மே,.... லூ ஜின் யாங்,.... யாப்சின் யூன் என்ற மூன்று மாணவர்களும் ஒரு கடலில் மிதக்கும தூய தண்ணீர்க் குடுவைகளைத் தயாரித்திருக்கின்றனர். 

தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் இக்குடுவைகள் அதில் உள்ள உப்புத் 
தன்மையையும் அறவே நீக்கிவிடுகின்றனவாம். 

குடுவைகள் உறிஞ்சிய தண்ணீர் முதலில் நீராவியாகும். பிறகு அவை குளிர்ந்து நன்னீராக மாறுமாம். 

ஒரு குடுவை சுமார் 30 லிட்டரிலிருந்து 40 லிட்டர் தண்ணீரைச் சேமித்து 
வைத்திருக்கும். 

 கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு ஏராளமான செலவு ஆகும். ஆனால் இந்த வகைக் குடிநீர்க் குடுவைகளும் மிக சொற்பமான செலவே ஆகுமாம்! 

இந்த ஆராய்ச்சியை  மிக முக்கியக் கண்டுபிடிப்பாகக் கருதுகின்றனர். 

ஒரு குழாயைப் பொருத்தி விட்டால் பயணம் செய்வோர் ஆங்காங்கே தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ள இயலும் போலிருக்கிறது!

கேட்கவே ஆச்சரியமா இருக்கு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com