கடி

""உங்கப்பா ஏன் மாடிப்படியிலே உட்கார்ந்து காபி குடிக்கிறாரு?''""காபி குடிக்கிறதை படிப்படியா நிறுத்தப்போறாராம்!''
கடி

""உங்கப்பா ஏன் மாடிப்படியிலே உட்கார்ந்து காபி குடிக்கிறாரு?''
""காபி குடிக்கிறதை படிப்படியா நிறுத்தப்போறாராம்!''

கு.வைரச்சந்ததிரன், திருச்சி .

""என்னடா இது?.... உன் பனியன்  இவ்வளவு நீளமா இருக்கு?''
""இது நீண்டு உழைக்கும்னு கடைக்காரர் சொன்னாரு..... நான்தான் சரியா புரிஞ்சுக்கலே!''

கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம், 605602

""நான் மேலே படிக்கலாம்னு இருக்கேன்!''
""அப்போ ஜூன், ஜூலையிலேயெல்லாம் படிக்கவே மாட்டியா?''

சி.ஆர்.ஹரிஹரன்,
அலுவா - 683108


""ஆரஞ்சு எவ்வளவு அங்கிள்?''
""முப்பது!''

க.ஜெயராம், 
திண்டிவனம் - 604001

""ஸ்ஸ்ஸ்ஹா!.... ஸ்ஸ்ஸ்ஹா!''
""என்னடா எதாவது ரொம்ப காரமா சாப்பிட்டியா?''
""இல்லே எங்கப்பா எனக்கு உரைக்கிறா மாதிரி புத்தி சொன்னாரு!''

ஆர் . சுப்பு,  
திருத்தங்கல் - 626130

""மழை எப்படிப் பெய்யுது? சொல்லு பார்க்கலாம்!''
""தண்ணியாதான்!''

சி.ஆர்.ஹரிஹரன்,
அலுவா - 683108

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com