குட்டிமீன்!

ஸ்படிகம் போல் தண்ணீர் நிறைந்த ஒரு ஏரி. அதில் இருந்த குட்டி மீன் தன்அம்மாவிடம், ""நாம வாழறதுக்கு தண்ணீர் ரொம்ப அவசியம்னு சொல்லுவீங்களே...., அந்த தண்ணீர் எங்கேம்மா இருக்கு?'' என்று கேட்டது.  
குட்டிமீன்!

ஸ்படிகம் போல் தண்ணீர் நிறைந்த ஒரு ஏரி. அதில் இருந்த குட்டி மீன் தன்அம்மாவிடம், ""நாம வாழறதுக்கு தண்ணீர் ரொம்ப அவசியம்னு சொல்லுவீங்களே...., அந்த தண்ணீர் எங்கேம்மா இருக்கு?'' என்று கேட்டது.  
 உடனே தாய் மீன், ""இதுதான் தண்ணீர்''  என்று காட்டியது! 
குட்டி சுற்றும் முற்றும் பார்த்தது. அதற்கு தண்ணீர் என்று தனியாக ஏதும் தெரியவில்லை. ""அம்மா, எனக்கு தண்ணீரை சரியாகக் காண்பியுங்கள்'' என்றது. 
மீண்டும் தாய் மீன் தண்ணீரைக் காண்பித்தது. அப்போதும் குட்டி மீனுக்குத் தண்ணீர் தெரியவில்லை. 
""போம்மா!.... உனக்கு ஒன்றுமே தெரிலே!'' என்று  கூறிவிட்டு தன் அப்பா மீனிடம் சென்றது.
 குட்டி மீன் அப்பாவிடம், ""தண்ணீர் எங்கேப்பா இருக்கிறது?'' என்று கேட்டது. 
அப்பா மீனும் தண்ணீரைக் காண்பித்தது. ஆனால் குட்டி மீனுக்கு தண்ணீர் என்பது என்ன என்று புரியவில்லை. பின்பு உறவினர்கள், நண்பர்கள் எல்லோரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டது. எல்லோரும் ஒரே பதிலையே கூறினார்கள்.
குட்டிமீனுக்கு எந்த பதிலிலும் திருப்தி ஏற்படவில்லை. யாருக்குமே தண்ணீர் எது என்று தெரியவில்லை என நினைத்துக் கொண்டது. 
கடைசியில் அது ஒரு மிகப் பெரிய மீனைப் பார்த்தது. அந்த மீன் தனக்கு நிச்சயம் தண்ணீரைக் காண்பிக்கும் என நினைத்தது. 
அந்தப் பெரிய மீனிடம், ""அண்ணா, நீங்க எனக்குத் தண்ணீரைக் காண்பிக்க முடியுமா?. இங்கே யாருக்கும் அதைச் சரியா காண்பிக்க முடியலே!'' என்றது.
 ""தண்ணீர்தானே,.... அது சுலபம்!.... நான் உனக்கு காண்பிக்கிறேன்!.... என் முதுகு மேல் ஏறிக்கொள்!'' என்றது. 
குட்டிமீனுக்கு ஒரேகுஷி!.... ஒரே தாவில் பெரிய மீனின் முதுகில் ஏறிக்கொண்டது. 
தரையை நோக்கிச் சென்ற பெரிய மீன், குட்டி மீனை தரையில் எறிந்தது!  குட்டிமீன் தண்ணீர் இல்லாமல் துடித்தது! அதனால் மூச்சு விடமுடியவில்லை. உயிருக்குப் போராடியது. பெரிய மீன் அதனிடம் தண்ணீரைக் காட்டி, ""இதுதான் தண்ணீர்!'' என்றது. பிறகு குட்டிமீனைத் தன் முதுகில் ஏற்றித் தண்ணீரில் விட்டது! 
""அப்பாடி! இதுதான் தண்ணீரா?... இதனால்தான் நாம உயிர் வாழறோமா?..... தண்ணீரைக் கொடுத்த கடவுளுக்கு ரொம்ப நன்றி!'' என்று கூறிக்கொண்டே வேகமாக தன் அம்மாவை நோக்கி ஓடியது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com