முகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி
சொல் ஜாலம்
By -ரொசிட்டா | Published On : 20th November 2021 06:00 AM | Last Updated : 20th November 2021 06:00 AM | அ+அ அ- |

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோத்தால் முழுவதும் பயன்படும் மரம் ஒன்றின் பெயர் கிடைக்கும். விடைக்குப் போகாமல் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...
1. உங்கள் பள்ளியில் இருக்கும் இதற்கு அடிக்கடி சென்றால் நீங்கள் அறிவாளிகள் ஆவீர்கள்...
2. இது சொட்டு சொட்டாக விழும்...
3. அரசர்களின் இல்லம்...
4. இரவில் வருபவன் காலையில் மறைபவன்...
5. எந்தச் செயலையும் செய்வதற்கு நேரம் அதிகம் எடுத்தால் அதற்கான சொல் இது...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. வாசகசாலை,
2. மழைத்துளி,
3. அரண்மனை,
4. சந்திரன்,
5. சுணக்கம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : வாழைமரம்