கடி

வாத்து ரொம்ப தமாஷ்டா!''""எப்படி?''""பேக்....பேக் னு கத்திக்கிட்டு ஃபிரண்டுலே போகும்!''
கடி


""எங்க தாத்தாவுக்கு நான் ஒரே பேரன்!''
""அப்படியா?.... உனக்கு என்ன வயசு?''
""அஞ்சு''
""உங்க தாத்தாவுக்கு?''
""அவருக்கும் அஞ்சுதான்!''
""அதெப்படி?...''
""நான் பிறந்தப்புறம்தானே அவரு தாத்தாவானாரு!''

உ . அப்துல் ஹாதி,
கடையநல்லூர்.

""எனக்கு ஒரு சந்தேகம்டா''
""டிவியைப் பார்த்தா, பார்க்கணும்னு தோணுது,.... பைக்கைப் பார்த்தா ஓட்டணும்னு தோணுது.... 
""இதுலே என்ன சந்தேகம்?''
""ஆனா புக்கைப் பார்த்தா படிக்கணும்னு தோணலையேடா!''

உ . அப்துல் ஹாதி,
கடையநல்லூர்.

வாத்து ரொம்ப தமாஷ்டா!''
""எப்படி?''
""பேக்....பேக் னு கத்திக்கிட்டு ஃபிரண்டுலே போகும்!''

அ . பேச்சியப்பன்,
ராஜபாளையம், - 626117.


""கிளாஸ் நடத்தும்போது ஏண்டா 
மொபைலைப் பார்க்கறே?''
""ஆன்லைன் கிளாஸ் ஞாபகம் டீச்சர்!''

ஏ . மூர்த்தி,
புல்லரம்பாக்கம்.

""ஏண்டா இவ்வளவு லேட்டா வர்றே?... 
மணியைப் பார்த்தியா?''
""பார்த்தேன் சார்!.... ஆனா அவன்தான் 
என்னைப் பார்க்கலே!''

உமர்,
கடையநல்லூர்.


""ஊருக்குக் கிளம்பும்போது பெரிய மாமா கைச்செலவுக்கு 200 ரூபாயும், சின்ன மாமா கால் செலவுக்கு 200 ரூபாயும் கொடுத்துட்டுப் போனாங்க!''
""அது என்ன கால் செலவு?''
""மொபைல் ரிசார்ஜுக்குத்தான்!''

கோ . சாய்,
கிருஷ்ணாபுரம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com